உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாமணிக் கோவை

53

13

  • வேனிற் பாட்டு

இஃது, ஆங்கிலமொழியில் வல்ல கிரே (gray) என்னும் நல்லிசைப் புலவர் நலத்தகவியற்றிய செய்யுளினின்று மொழி பெயர்த்துக்கொண்டு செய்யப்பட்டது. வேனிற்கால இயனெறி வழாமை அக்கால நிலையிற் புறத்தே தோன்றும் உலகியற் பொருட்கண் நிகழும் நிகழ்ச்சியும், அந்நிகழ்ச்சியையே நிலைக் களனாக மொழிந்து கொண்டு அவ்வுலகியற் பொருணிலை யாமை புலப்படுத்தித் துறவுள்ளந் தோற்றுவிக்கும் அருமையுஞ் சுருங்கவுரைத்து உற்றுநோக்குவா ருணர்வெல்லாந் தன்வயப் படுத்து அவரறிவைப் பெருக்கி இன்பம் பயக்கும் நீரதாய் நிற்றலின் இவ்வரிய பாட்டைத் தமிழிலும் மொழிபெயர்த்து விடுதற்கு விரும்பி அதனை அவ்வாறே இயற்றினாம். கிடந்தவாறன்றி வேறுபடப் புனைந்து பாடுஞ் செய்யுள் வழக்குப்போலாது, உலகியற் பொருட்பெற்றி யெல்லாங் கிடந்தவாறே எடுத்து மொழிந் துறுதி பயக்குஞ் செய்யுள் வழக்கே தழீஇ வருதலின் இன்னோரன்ன பாட்டுகள் பெரிதும் போற்றப்படுவனவாமென்க. சங்கப் புலவரியற்றிய பழைய தமிழ் நூல்களும், பிற்காலத்துச் சேக்கிழார் போன்ற சில ஆசிரியன்மாரியற்றிய நூல்களும் கிடந்தவாறு புனைந்துகூறும் மெய்ப்பொருட் செய்யுள் வழக்கே தழுவி நடை பெறுவனவாக, மற்றும் மெய்பொருள் வழக்கொடு L மலைந்த வடமொழி வழக்கேபற்றி உற்றுநோக்குவாருணர் வெல்லாம் ஊக்கமும் உறுதியுமின்றிக் கழிந்து இளைப்படையப் பலப்பல தோன்றியவாறெல்லாம் புனைந்துகூறும் ஏனை நூற்பொருளெல்லாம் அத்துணையாகச் சிறந்தெடுத்துப் போற்றப்படுவன வல்லவாமென்று துணிக. ஒரு காப்பிய நூல் இயற்றுதுமெனப் புகுந்து நாட்டுப்படலம் நகரப்படலமென வகுத்து வாளாது விரியப்பாடுதலும், கம்பராமாயணம்

பு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/86&oldid=1580043" இலிருந்து மீள்விக்கப்பட்டது