உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

11

மறைமலையம் – 11

சுந்தரகாண்டங் கடறாவு படல முகத்தில் வரையறையின்றி மிக விரித்துப் புனைந்து பாடுதலும் போல்வன வெல்லாங் கேட்போருணர்வுங் காண்போருணர்வுஞ்சலித்து வெறுப்படையத் திரிக்கும் வடமொழி வழக்குப்பற்றி வருவனவாதலான், மற்றவை அத்துணையாகத் தேறப்படுவன வல்லவாமென்பதூஉம், சிலப்பதிகாரம், மணிமேகலை, கலித்தொகை, பத்துப்பாட்டு, பெரியபுராணம் முதலிய நூல்களிற்போல நூற்பொருள் நடந்து செல்லு நெறிக்கிடையே கேட்போருணர்வு பாற்படுவகையான் இன்பந் தோன்றக் கிடந்தவா றெடுத்துமொழிந்து உண்மை யுணர்வு தோற்றி விருப்பமுறுக்கவல்ல மெய்ப்பொருள் வழக்கேபற்றி வருவனவெல்லாம் பெரிதுங் குறிக்கொண்டு போற்றப்படுவனவா மென்பதூஉம் நுண்ணறிவுடையார்க் கெல்லாம் இனிது விளங்கும். ஆங்கில மொழியில் வல்ல சேக்ஸ்பியர், மில்டன், கிரே முதலிய நல்லிசைப் புலவ ரெல்லாரும் இங்ஙனமே கிடந்தவா றெடுத்துச் சமயம் நேர்ந்துழி யெல்லா மெய்யுணர்வு தோன்றக் கூறுதலின் அவரெழுதிய நூற்பொருள்களும் மேதக்கனவா மென்பது.எந்நாட்டிலாயினும் எச்சொல்லிலாயினும் எம்மக்களிலாயினும் புகழப்படும் அருங்குணமாட்சிகளுள வாயின் மற்றவற்றை விளங்கக் காட்டி வியந்து பாராட்டுதல் மெய்ப்பொருளாராயும் நடுவுநிலை யாளர்க்குரிய கடமையாம். அஃதொழியத் தாமுவந்தனவே நல்லவென்று தம்முள் வைத்து நலம் பாராட்டுவா ருரைகள் அறிவுடை மக்கள் கொள்ளராதலின், அத்துணிவுபற்றி ஆங்கில மொழியிலுள்ள இதனை மொழிபெயர்த்தியற்றினாம். இப் பாட்டின் இயனெறி தெரிக்கப்புகுந்தமையின் இத்துணையும் இது விரிந்ததென்றுணர்க.

இனி, இப் பாட்டை ஆங்கிலமொழியில் எழுதிய கிரே என்னும் புலவர் தம் ஆங்கில மொழிச் செய்யுள் வழக்குக் கேற்பவும், தந்தேச வொழுக்கங் குலவொழுக்கங்கட் கேற்பவும் அதனை இயற்றுதலின்,மொழியும் செய்யுள்வழக்குந் தேசவியலும் வேறுபட்ட எம்மனோர்க்கு அங்ஙனங் கிடந்தவாறே எடுத்து மொழிபெயர்த்துவிடின் அச்செய்யுட் பொருளறிந் தின்புறுதல் சல்லாமையின், தமிழ் வழக்குக் கேற்குமாற்றான் அதனைச் சிற்சில இடங்களிற் றிரிவுபடுத்தி எதுகை நயம், மோனை நயம், சொற்பொருட் பொருத்தங்கட்கேற்பச் சில கூட்டியமைத்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/87&oldid=1580044" இலிருந்து மீள்விக்கப்பட்டது