உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாமணிக் கோவை

55

இதனை ஈண்டுவெளியிடத் துணிந்தாம். இன்னும் இதன்கண் திருத்தங்கள் செய்து செய்யுளழகை உயர்த்தவல்ல நுட்பங்கள் இதனை நோக்கும் நண்பர்கள் அறிவாராயின் அவற்றை அன்புகூர்ந்து தெரிவித் தெம்மை இன்பமுறுத்துவாராக!

ஒளிவனப்பி னிரதிதனக் குறுபாங்கி மாராகி யொளிர்செஞ் சாந்த நளிகொளுவ வெழின்முலைமேற் றிமிர்ந்தாங்கு

நறுஞ்செந்தா மரைகள் பூப்ப வெளிவந்து களிதழுவ விளையாடு

வியன்பருவ மடந்தை மார்ந்தாந்

தெளியபல பகல்விரும்பு மலரவிழ்த்துத் திகழாண்டு மெழுப்பு வாரால்.

அக்காலை யிரவதனி லினியவிசை யழகுதர மிழற்று மோர்புள் குக்கூவென் றிசைகுயிலின் குறிப்பாட்டி னெதிர்வேனிற் குலவு பண்கள்

மிக்கூர வருமிடற்றிற் பொதிகொண்டு வெளியுகுப்ப விரிதண் கோடை

மைக்கூருந் தெளிவிசும்பிற் சிறைதிரட்டு மணந்தெளித்தின் புறுக்குமன்றே.

பரியவரைப் பெருமரங்க டிணிகோடு

பயந்தசெழு நிழல்க டோறும்

பொரிபொகுட்குச் செவிரமுறு மரைமரங்கள்

பொலிந்துகவி யதர்க டோறும்

விரிதிரைக்கை பொருதடத்தின் கரைமருங்கும்

விளங்குகலை மகளென் னோடு

முரிதிருப்பப் புறமிடைந்து மருதநில

மக்களென வுறுமக் காலை.

மன்பதையினவாவளவு வறிதெழுந்து

கழியுமது வென்னே யென்னே

இன்பமது வுளந்துளும்பச் செருக்குறுவோ

ரிழிவெய்தித் தாழ்த லென்னே

(1)

(2)

(3)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/88&oldid=1580045" இலிருந்து மீள்விக்கப்பட்டது