உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94

மூன்றாம் நிகழ்ச்சி : எட்டாங் காட்சி

களம் : அமராவதியின் கன்னிமாடப் பூங்கா மண்டபம். காலம் : மாலை

(அமராவதியுந் தோழியுந் திரைக்குப் பின்னே வருகின்றனர்)

இருவரும் : ஆசிரியர்க்கு வணக்கம்! கோயிலுக்குப் போய் றைவியையும் இறைவனையும் யாங்கள் வணங்கி வரச் சிறிது நேரஞ் சென்றுவிட்டது; தங்களைக் காக்க வைத்த பிழையைப் பொறுத்தருளல் வேண்டும்.

66

அம்பிகாபதி : நீங்கள் பிழையொன்றுஞ் செய்யவில்லை. ‘கற்றதனால் ஆய பயன்என்கொல் வாலறிவன், நற்றாள் தொழா அரெனின்” என்று தெய்வத்திருவள்ளுவர் அருளிச் செய்தபடி கல்விகற்பதெல்லாங் கடவுளை வணங்கத்தானே? நல்லது, புறநானூறு துவங்கிச் சிறிதேறக் குறைய ஒரு திங்கள் ஆகப்போகின்றது. தொல்காப்பியப் பொருளிலக்கணப் பாடமும் ஊடே ஊடே நடந்து வருதலால், புறநானூற்றின் பாடம் மெல்லச் செல்கின்றது. இப்போது எந்தப் பாட்டுக்கு உரை சொல்லல் வேண்டும்?

அமராவதி : பெரும, இப்போது பாடம் நடக்கவேண்டு

வது எட்டாஞ் செய்யுள்; அதனைப் படிக்கின்றேன்.

66

வையங் காவலர் வழிமொழிந் தொழுகப்

போகம் வேண்டிப் பொதுச்சொற் பொறா அது

இடஞ் சிறிதென்னும் ஊக்கந் துரப்ப

ஒடுங்கா வுள்ளத் தோம்பா ஈகைக்

கடந்தடு தானைச் சேர லாதனை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/127&oldid=1580729" இலிருந்து மீள்விக்கப்பட்டது