உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்பிகாபதி அமராவதி

யாங்கனம் ஒத்தியோ விலங்குசெலன் மண்டிலம் பொழுதென வரைதி புறக்கொடுத் திறத்தி

மாறிவருதி மலைமறைந் தொளித்தி

அகலிரு விசும்பி னானும்

பகல் விளங்கலையாற் பல்கதிர் விரித்தே”

95

அம்பிகாபதி : ஓ! இச் செய்யுளுக்கு இச் செய்யுளுக்கு இருவேறு பாடங் கள் உண்டு. ஞாயிறு திங்கள் என்னும் இரு பெருஞ்சுடர்களில் ஒன்றை எடுத்துச் சேரலாதன் என்னும் வேந்தர் பெருமா னுக்கு கு உவமையாகச் சொல்லப்புகுந்த இதன் ஆசிரியர், சேரலாதன்றன் உயர்பெருங் குணங்களுக்கு ஒவ்வாத குறைபாடு உடையது டயது திங்களேயல்லாமல் அல்லாமையை நன்கு உணர்ந்தவராதல் வேண்டும்; ஆகவே திங்கள்மேல் வைத்துப் பாடங்கொண்டு உரைகூறிய பேராசிரியருரையே மெய்யுரையாகக் காணப்படுகின்றது.

ாயிறு

அமராவதி : சேரலாதற்குத் திங்கள் ஒவ்வாமையினைச் சிறிது விளக்கியருள்க.

L

ஞ்

அம்பிகாபதி : அங்ஙனமே ஏனை அரசரெல்லாரு சேரலாதனுக்கு அடங்கி ஒழுகுவரேயல்லாமற், சேரலாதன் வேறெவர்க்கும் அடங்கி ஒழுகுவான் அல்லன். மற்று, மதியமோ ஞாயிறு முதலான முதலான கோள்களின் கோள்களின் ஒளியைத் தன்னொளியுள் அடக்க வல்லதன்று: ஞாயிற்றினொளியில் தன்னொளி அடங்க நடப்பது பாருங்கள்; இதோ கீழ்ப்பால் நிலவொளிதுலங்கத் திகழாநின்ற முழுமதியமானது, பகற் காலத்தே கதிரவன் முன்னே இத்துணைப் பேரொளியுடன் தோன்ற வல்லதாமோ?

6

அமராவதி : (தன் தோழியை நோக்கி மெல்லிய குரலில்) என்னடி நீலம் நம் ஆசிரியரைக் கண்ணில்லாக் குருடர் என்றனையே! இதோ அவர் வானில் விளங்கும் முழுமதி யினைச் சுட்டிக்காட்டிச் சொல்கின்றனரே!

தோழி: எனக்கும் இஃதொரு பெருவியப்பாகவும்

ஐயமாகவுமே இருக்கின்றது!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/128&oldid=1580730" இலிருந்து மீள்விக்கப்பட்டது