உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96

மறைமலையம் 12

(அமராவதி உடனே திரையை ஒருபால் விலக்கி வெளியே நோக்க)

அம்பிகாபதி : ஓ! ஓ! அமராவதி உன்னை அழகில்லாத முடத்தி என்றனரே!

அமராவதி : ஐயோ! பெருமானே! உங்களைக் கண் ணில்லாத குருடரென்றனரே!

இது சொல்லி அமராவதி இருக்கைமேல் மயங்கிச் சாய்கின்றாள். அது கண்டு அம்பிகாபதி துடிக்கின்றான்; தோழி நீலம் துடிதுடித்து ஓடிப்போய் வந்து முகத்திற் பனிநீர் தெளித்து மயில் விசிறி கொண்டு வீச அமராவதி மயக்கந் தெளிந்து இருக்கையை விட்டெழுந்து நாணத்தோடு நிற்கின்றாள்)

அம்பிகாபதி : (தோழியை நோக்கி) அம்மா நீலம்! ன்றைக்கு நடந்த பாடம் இவ்வளவே போதும், நாளை அதனை நடத்தலாம். அமராவதியைக் கருத்தாய்ப்பார். ஒன்றுமட்டுங் கேட்கின்றேன். நேற்றுக்காலையிற் சிவபிரான் கோயிலில் பாடி நடித்தவர் அமராவதிதானே?

தோழி : ஆம் பெருமானே. அப்போது அங்கு வந்திருந்த ளைஞருந் தாங்கள் தாமே?

அம்பிகாபதி : ஆம் அம்மா. எனக்கும் ஒரு வகையான மயக்கம் உண்டாகின்றது. யான் போய் வருகின்றேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/129&oldid=1580731" இலிருந்து மீள்விக்கப்பட்டது