உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98

❖ LDM MLDMOED -12 →

வானூர் மதியும் ஒவ்வாநின்

முகத்தின் வனப்பும் அம்முகத்திற் றேனூர் சுவையும் மாறாது

தெளிந்த உணர்வுங் தேங்குகின்ற பானேர் மொழியுங் கண்டுள்ளம்

பரிந்து மயங்கி வீழ்ந்ததனை மானே யனையாய் வண்பாவின்

மகிழ்சொல் லமிழ்தால் மாற்றினையால்!

மாயாப் புகழ்கெண்ட நின்றந்தை

தந்த மகனெனக்குச் சாயாத நண்பனும் நின்னுடன்

போந்த தமையனுமாய் வாயா விடினுனை யான்பெற

லெங்ஙனம் வார்குழலாய்

நீயாது செய்வை யிதுவுநம்

வேலவன் நீடருளே.

காவேரி

உண்மை யுண்மையென் உயிர்த்துணைப் பெரும!

அண்ணன் மறுத்தால் அப்பனும் மறுப்பன்;

என்னைப் பேணிக் கண்ணென வளர்த்துத் தண்டமிழ் உணர்த்திய வண்டமிழ் வாணராம் அப்பனும் அண்ணனும் ஒப்பா வழியிற் செல்லின்என் னெஞ்சம் அல்லற்படுமால் நல்ல அவ் விருவர்தஞ் சொல்வழிச் செலினோ நல்லஅவ் விருவர்தஞ் சொல்வழிச் செலினோ காதற் கற்பிற் கேதம் வருமால்!

ஒருவரை விழைந்தஎன் திரிபில் நெஞ்சம் மன்னன் மகனே யாயினும் அன்னவனை

நனவினும் நினையாது கனவினும் நினையாது;

கல்லுண்டு வாழுங் காதற் புறவுங்

காதலற் பிரியாது பிரிந்துழிச் சாதல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/131&oldid=1580733" இலிருந்து மீள்விக்கப்பட்டது