உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்பிகாபதி அமராவதி *

பெரியோர் சொல்லத் தெரிது மன்றே; ஏந்தால் நின்னை விழைந்தஎன் னெஞ்சம் பேர்ந்தோர் ஆடவற்பேணாப் பான்மையை நன்கினி தெனக்கு முன்னவன் உணர்ந்து நின்னுடன் என்னைப் பின்னமுன் னியதூஉம் முன்னி யாங்கே இன்னுரைத் திருமுகம் என்பார் சேர்த்தெனக் கன்புரை பகர்ந்ததூஉம் எல்லா வல்லநம் இறைவ னருளெனத்

தொல்புகழ்ச் சேவடி தொழுது வாழ்த்துவமே!

99

(மாளிகையின் தலைவாயிற் கதவுதட்டும் ஓசை கேட்டு இருவரும் உரையாடலை நிறுத்தித் 'திருத்தொண்டர் புராணம்’ ஓதுகின்றனர்)

தோழி பச்சை : ( மாளிகைமேல்வந்து) அம்மா காவேரி, அரசிளைஞர் வந்து நிற்கின்றார். மேலே வரலாமா என்று கேட்டுவரச் சொன்னார்.

இருவரும் : (பரபரப்புடன்) வரச்சொல்! (தமக்குள்) இவன் ஏன் இந்நேரத்தில் வந்து நமக்குத் தொல்லை கொடுக்க வேண்டும்?

அரசிளைஞன் : (மேற்போந்து) ஓ! நயினார்! காவேரிக்குப் பாடஞ் சொல்கின்றாயோ? திருத்தொண்டர் புராணம் இன்னும் முடியவில்லையா? காவேரி! உங்கள் அப்பா தென்னாட்டுக்குப் போய் ஒரு திங்களுக்கு மேல் ஆகிறதே! நீ மிக மெதுவாகப் படிக்கின்றனை போலும்!

நயினார் : அப்பா விக்கிரமா! பெரிய புராணத்தை எளிதாக நினைத்து விடாதே! இதன் செய்யுட்கள் தெரிந்த சொற்களால் தொடுக்கப்பட்டிருப்பன போற்றோன்றினும் அவை பொருள் நுணுக்கமும் ஆழமும் வாய்ந்தவை. என் சிற்றறிவுக்கு எட்டியமட்டில் இதன் செய்யுட் சொற்பொருள் நுட்பங்களை நன்காராய்ந்து பாடஞ்சொல்லி வருகின்றேன். யான் நம் ஆசிரியர் கம்பர்பால் இந்நூலைப் பாடங் கேட்டபோது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/132&oldid=1580734" இலிருந்து மீள்விக்கப்பட்டது