உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100

மறைமலையம் 12

எனக்குண்டான அறிவினும், ான அறிவினும், என்னறிவை யானே பயன்படுத்தி இதனை இப்போது ஆராய்ந்து வருதலால் என்னறிவு மேலும் மேலும் நிரம்பத் தெளிவடைந்து வருகின்றது.

அரசிளைஞன் : நீ சொல்வது எப்படியோ! இந்த நூல் களையெல்லாம் இவ்வளவு நுட்பமாகப் படித்தலால், என்ன பயன் அடையப் போகிறாய்? படித்தோம் என்கிற பெயருக்கு அடித்து நகர்த்திவிடாமல், வீணே காலத்தை ஏன் கழிக்க வேண்டும்? மற்போர், சேவற்சண்டை, கத்திவிளையாட்டு, நீர்விளையாட்டு, குதிரைப்பந்தயம் முதலியவைகளில் நான் கருத்தைச் செலுத்துவதுபோல், இந்நூல்களைப் படிப்பதில் நான் கருத்தைச் செலுத்தவில்லை. என் தந்தையும் அன்னை யும் எந்நேரமுந் தமிழ் நூல்களைக் கட்டிக் கொண்டு அழுகின்றார்கள்! அது போதாதென்று என் தங்கை அமராவதியையும் எந்த நேரமும் படிக்கச் சொல்லியும், பாடச்சொல்லியும், ஆடச்சொல்லியும் கெடுக்கின்றார்கள்! கம்பர் திரும்பி வரும் வரையில் அமராவதியின் பாடத்தை நிறுத்தி வைத்தால் என்ன முழுகிப்போய்விடும்? காவேரியைப் போலவே அமராவதி மிக்க அழகுடையவள்; அவளுக்கு அம்பிகாபதி பாடஞ் சொல்ல ஏற்பாடு செய்துவைத்து, இவனும் மிக்க அழகுடையவனாதலால் இவன் என் தங்கையையும் என் தங்கை இவனையும் பாராதபடி பொய்யும் புளுகுங் கட்டிவிட்டுப் பாடம் நடத்தி வருகிறார்கள்! இதை நான் வெளியே சொன்னால் என் தலை போய்விடும்! நயினார்! காவேரி! இதைப்பற்றி வாயைத் திறந்து திறந்துவிடாதீர்கள்! அதிருக்கட்டும்; பண் பிள்ளைகள் ஆழமாகவும் கருத்தாகவும் படிக்கவேண்டுமென்பது விளங்கவில்லை. ஆண்பிள்ளைகளுக்கே இவ்வளவு ஆழமான கல்வி வேண்டுவதில்லை; பொருள் தேடிச் சேர்ப்பதற்கு வேண்டுமளவே அவர்கட்குக் கல்விவேண்டும். அவர்கள் தேடித் தொகுத்த பொருளைக் கொண்டு பெண்பிள்ளைகள் அவர் களுடன் கூடிப் பலவகையான ன் இன்பங்களையும் நுகரல் வேண்டும். நானும் நீயும் அம்பிகாபதியும் கம்பரிடம் பாடங்கேட்கும் போது; அவர் வீணே விரித்து நீட்டிக்கொண்டு

ஏன்

இவ்வளவு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/133&oldid=1580735" இலிருந்து மீள்விக்கப்பட்டது