உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்பிகாபதி அமராவதி *

101

போன உரைகளை யெல்லாம் நான் மனத்தில் வாங்குவதே யில்லை. அம்பிகாபதி என் தங்கைக்குப் பாடஞ்சொல்லும் போது ஒருநாள் திரைமறைவில் யானும் என் தங்கை தோழி மாருடனிருந்து அவன் சொல்லி வந்த உரையைக் கேட்டேன். அவனுந் தன் தந்தையைப் போலவே வீணே விரித்து வழவழவென்று உரை சொல்லி வந்தான்; 6 எனக்கது பிடிக்கவில்லை.

நயினார் : உனக்கது பிடியாவிட்டாற் போகட்டும் பாடங் கேட்பவர்கட்கு அவனது உரை எங்ஙனமிருந்தது?

அரசிளைஞன் : அவன் உரைசொல்லி வரும்போதெல் லாம் எந் தங்கையுந் தோழிமாரும் இடையிடையே ‘ஆ! ஆ! ஈது எவ்வளவு நுட்பமானது! ஈது எவ்வளவு அழகானது! ஈது எவ்வளவு ஆழமானது! ஈது எவ்வளவு உருக்கமானது!' என்று சொல்லிச் சொல்லி வியந்தார்கள்! மகிழ்ந்தார்கள்! எனக்கோ அவன் சொல்லி வந்த உரையும், அது கேட்டு அவர்கள் வியந்து மகிழ்ந்ததும் எள்ளளவும் பிடிக்கவில்லை. பிறகு நான் அந்தப் பக்கம் செல்வதேயில்லை. அதுபோகட்டும். அம்பிகாபதி ஏன் இன்னும் அரண்மனையிலிருந்து வரவில்லை? முழு நிலாவாதலால் இன்னும் பாடஞ்சொல்லிக் கொண்டிருக் கின்றானோ? பத்து நாழிகையாகிறது, அவனைப் பார்த்து டுப் போகலா மென்றிருக்கிறேன். உனக்கு நேரமாவதால் நீ வீட்டுக்குப் போகலாம்.

நயினார் : (மனஐயுறவும் (மனஐயுறவுடன்)நல்லது. நான் போய் ருகிறேன். அம்பிகாபதிக்குச் சொல். காவேரி, நான் போய் வரட்டுமா?

காவேரி : நல்லது சுவாமி (நயினார் போய்விடுகின்றான்)

அரசிளைஞன் : (தோழியை நோக்கி) பச்சே, நானுங் காவேரியும் அரண்மனைச் செய்திகளைப் பற்றித் தனியே யிருந்து பேசவேண்டும். நீ கீழே போய் வீட்டு வேலைகளைப் பார்.

(தோழி காவேரியை நோக்க)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/134&oldid=1580736" இலிருந்து மீள்விக்கப்பட்டது