உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102

என்

மறைமலையம் 12

காவேரி : (சிறிது தடுமாற்றத்துடன்) ஆம், பச்சே, இவரும் தமையன்றானே. அப்பா ஊரிலிருக்கும்போதே எத்தனையோ முறை யான் இவருடன் தனியே யிருந்து படிக்கவில்லையா? விளையாடவில்லையா? என் தமையனும் இவரும் நயினாரும் யானும் சிறுபருவம் முதல் ஆடி விளையாடியவர்கள்தாமே. நீ கீழேபோ, நான் அழைக்கும் போது வா (தோழி கீழே போய்விடுகிறாள்)

அமர்.

அரசிளைஞன் : (மகிழ்ந்து) காவேரி என் பக்கத்தே வந்து

காவேரி : தமையனாயிருந்தாலும் பருவம் அடைந்த மங்கை, அவனை நெருங்கப்பெறாள். ஆகையால் யான் உன்னை விலகியே யிருக்கின்றேன்.

அரசிளைஞன் : நானும் நீயும்

பிறந்தோம்?

நானும் நீயும் ஒரே தாய்வயிற்றிலா

காவேரி : உடன் பிறப்பவர்களெல்லாந் தாம் பிறந்கும் போது 'ஒரு தாய் வயிற்றிலிருந்தே தான் பிறக்கின்றோம்' எனக் கண்டனரா? இல்லையே. பெற்றோரும் பிறருஞ் சொல்லு தலாலும், ஒருங்கு நெருங்கிப் பழகி நீளவளர்தலாலுமே தாம் ஒரு தாய் வயிற்றிற் பிறந்தோமெனக் கருதுகிறார்கள். நீ அரசன் மகன் என்றும், யான் கம்பர் மகள் என்றும் எவருமே நமக்குத் தெவியாவிட்டால், நீயும் யானும் நெருங்கி நீளவளர்ந்த பான்மையில் நீ தமையனும் நான் உனக்குத் தங்கையுமாதல் திண்ணமன்றோ, ஆதலால், நீ எனக்கு என்றுந் தமையனே காண்.

அரசிளைஞன் : நீ நின் அறிவின் திறமையால் என் வாயை அடைக்கப் பார்க்கின்றாய். நல்லது, ஒரு பெண்ணுக்குத் தன் தமையனினும் மிக்க அன்புடையவனாகக் கொள்ளப் படுபவன் யாவன்? நீயே சொல்.

காவேரி : தமையனிலும் அன்புடையவனாகக் கருதப்படு பவன் யாரோ எனக்குத் தெரியாது.

அரசிளைஞன் : பருவம் அடைந்த உனக்கு அது தெரி யாதது புதுமையே! நல்லது நானே சொல்லுகிறேன். எவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/135&oldid=1580737" இலிருந்து மீள்விக்கப்பட்டது