உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்பிகாபதி அமராவதி *

103

உன்னைத் தன்னுயிராக்க கருதிக் காதலன்பு பாராட்டு கின்றானோ அவனே உனக்குத் தமையனிலும் மேலான காதலன் ஆவன்.

காவேரி : ஆம்! நீ சொல்வது நன்றாயிருக்கின்றது! என் தந்தையுந் தமையனும் என்னைத் தம்முயிராகவே கருதி உள்ளன்புடன் வளர்த்து வளர்த்து வருகின்றனர். வருகின்றனர். அவரை நீ என் னென்று நினைக்கின்றாய்?

அரசிளைஞன் : உள்ளன்பு மட்டுமன்று; உன்னழகிய உடம்புடன் தன்னுடம்பும் பொருந்தப் பெறுபவனே உனக்குக் காதலன் ஆவன்.

காவேரி : என் தந்தை தமையனாரால் எனக்குக் கணவ னாக மணஞ்செய்விக்கப்படுபவன் அல்லனோ என்னுடன் பொருந்தத் தக்கவன் ஆவான்?

அரசிளைஞன் : அங்ஙனம் மணஞ்செய்விக்கப்படாமற் காதலன்பு பாராட்டும் ஒருவன் உன்னைப் உன்னைப் பொருந்தத் தக்கவன் அல்லனோ?

காவேரி: அல்லன் அல்லன் வீணே பேச்சை வளர்க் காதே; என் தமையன் வர நேரம் ஆகும் போலிருக்கின்றது; நீ அரண்மனைக்குப் போ! அடீ பச்சே! (என்று கூவ, வந்த தோழியைப் பார்த்து) அரசிளைஞர் அரண்மனைக்குப் போக வழி விட்டுவா!

அரசிளைஞன் : (சீற்றத்துடன்) எனக்குப்போக வழி தெரியும்; இவள் என்னுடன் வரவேண்டுவதில்லை! (என்று சொல்லிப் போய் விடுகின்றான்)

(சிறிது நேரத்தில் நயினார் பிள்ளை வருகின்றான்)

காவேரி : என்ன பெருமான்! வீட்டுக்குப் போனவர்கள் ஏன் திரும்பி வந்தீர்கள்?

நயினார் : (புன்சிரிப்புடன்) கண்மணி! யான் வீட்டுக்குப் போனேன் என்றா நினைத்தாய்? உன்னை விக்கிரமனுடன் தனியே விட்டுப்போக மனம் இசையாமல் நம் தோழி பச்சை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/136&oldid=1580738" இலிருந்து மீள்விக்கப்பட்டது