உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104

❖ LDM MLDMOED -12 →

யினுதவியால் இவ்வறைக்குப் பக்கத்தறையிலேயே ஒளித் திருந்து, உனக்கும் அவனுக்கும் இடையே நடந்த உரை யாட்டைக் கேட்டு மகிழ்ந்து கொண்டிருந்தேன். விக்கிமன் வாயை நீ அடைத்துவிட்டதுபோல், அன்றைக்கு என் வாயையும் நீ அடைத்திருந்தால் என்னுயிர் போயிருக்குமே!

காவேரி : (புன்சிரிப்புடன்) உங்களுயிர் யானாகவே இருக்கையில், அஃதெங்ஙனம் போகக்கூடும்?

(அம்பிகாபதி வருகின்றான்)

நயினார் : என்ன அம்பிகாபதி! இன்றைக்கு இவ்வளவு நேரங்கழித்து வந்தனை?

அம்பிகாபதி : (விடைசொல்லச் சிறிது தயங்கி) நீயும் இன்றைக்கு நெடுநேரமாய் இங்கிருக்கின்றனையே!

நயினார் : யான் காவேரிக்குப் பாடஞ் சொல்லி முடித்து வீட்டுக்குச் செல்லுந் தறுவாயில் அரசிளைஞன் வந்தான். வந்தவன் நான் செய்யும் ஆழ்ந்த தமிழ் ஆராய்ச்சியினை முழுமடமையுடன் இழித்துப்பேசிவிட்டு, என்னை வீட்டுக்கு ஏகும்படி ஏவினான். அவனைக் காவேரியுடன் தனியே விட்டுப்போக மனம் ஒருப்படாமற், போவது போற் காட்டிப் பக்கத்தறையில் ஒளித்திருந்தேன். விக்கிரமன் காவேரியைத் தனக்கு வைப்பாட்டியாக்கிக் கொள்ளப் பார்த்தான். ஆனால், காவேரியோ அவன் வினாவியவைகளுக்கெல்லாஞ் செவிட்டில் அடிப்பதுபோல் விடை கூறி அவனைத் துரத்தி விட்டாள். அவன் சினத்துடன் சென்றதை நோக்குங்கால், அவன் காவேரிக்கும் உனக்குந் தீங்கிழைப்பான் போற்றோன்று கின்றனவே! என்செய்வது?

அம்பிகாபதி : நண்பா! அதுபற்றிக் கவலைப்படாதே காவேரியினிடம் அவன் கொட்டம் ஒன்றுஞ் செல்லாது. மேலும் அவன் முழுமுட்டாள். அவன் ஆராய்ச்சியறிவின்றிச் செய்யும் ஏதும் நம்மை ஒன்றுஞ் செய்யமாட்டாது. அவனையே அது தாக்கும். நேரமாவதால் நீ வீட்டுக்குப் போய்வா. ஒன்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/137&oldid=1580739" இலிருந்து மீள்விக்கப்பட்டது