உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்பிகாபதி அமராவதி

105

சொல்கிறேன், எவ்வகையிலும் அவன் நம் அரசன் மகனாதலால், அவனை நாம் பகைத்துக் கொள்ளல் ஆகாது, இங்கு அவன் நடந்ததேதுங் காட்டிக் கொள்ளாமல் என்றும் போல் நண்பராகவே நாம் ஒழுகல் வேண்டும்.

நயினார் : நல்லதங்ஙனமே நின்முகம் ஏதோ வாடிய தாமரை போல் வாட்டமுற்றிருக்கிறதே!

அம்பிகாபதி : ஒன்றுமில்லை. தொல்காப்பிய மெய்ப் பாட்டியல் மிகவுஞ் சிக்கலானது; அதனை இளவரசிக்கு நெடுநேரம் விளக்கியதால் உண்டான களைப்பைத் தவிர வேறெதுமில்லை.

நயினார் : நன்கு அயர்வு தீர்த்துக்கொள்! (போய் விடுகிறான்)

காவேரி : அண்ணா உணவெடுக்க வாருங்கள், உண வெடுத்தபின் களைப்புத் தீரும்.

அம்பிகாபதி : எனக்கு உணவில் தேட்டம் இல்லை அம்மா! ஏதாவது பருகக் காடுத்தாற்போதும், நாவறண்டு நெஞ்சுலர்ந்து போயிருக்கின்றது.

காவேரி : வெறும் பருகுநீர் ஆகாது. இவ்விளவேனிற் பருவத்திற்கு ஏற்றது நாரத்தம் பழமே; அதிற் சில அருந்திப் பனங்கற்கண்டு இட்டுக் காய்ச்சிய ஆவின் பாலைப் பருகுங் கள்! (இவையிரண்டுங் கொணரும்படி தோழியை அழைக்கத் தோழி அவற்றைக் கொணர்ந்து வைக்கின்றாள்)

அம்பிகாபதி : (பாலை முதலிற் சிறிது பருகிவிட்டு) குழந்தாய்! இப்போ தெனக்குச் சிறிது களைப்புத் தீர்ந்தது. முற்றிலுந் தீர்ந்த பிறகு இவைகளை உட்கொள்கின்றேன். மேன்மாளிகை முற்றத்திற் போய் நிலவொளியில் தனியாயிருந்து இவ்விரவைக் கழித்தால் தான் என் அயர்வு முழுதும் நீங்கும்.

காவேரி : அங்ஙனமே செய்யுங்கள் (மேன்மாளிகை முற்றத்திற்கு அவன் போக) அடி பச்சே! என் தமையனுக்கு வந்த களைப்புப் பாடஞ்சொன்னதனால் வந்ததன்று: வேறெதோ பிசகு நடந்திருக்கின்றது!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/138&oldid=1580740" இலிருந்து மீள்விக்கப்பட்டது