உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106

❖ LDM MLDMOED -12 →

தோழி : எனக்கொன்றும் புலப்படவில்லை அம்மா!

காவேரி : என்னைப்போல் மணமாகாத கன்னிப்பெண் உனக்கு இதன் உண்மை புலப்படாதுதான். யானே நயினார் மேற் காதல் கொண்ட பிறகுதான் காதலின் நிகழ்ச்சிகளை அறிந்தேன். என்றமையன் யாரோ ஓர் அழகிய பெண்ணைக் கண்டு காதலித்துத்தான் இங்ஙனம் வாடியிருக்கின்றாரென்று கருதி என் நெஞ்சம் நடுங்குகின்றது!

தோழி : நம் அண்ணன் யாரைக் கண்டு காதலித்திருக்கக் கூடும். அரண்மனையிற்றான் கட்டுக்காவல் கடுமையா யிற்றே. அதுவும் அமராவதியிருக்குங் கன்னிமாடத்தில் ஆண்காற்றே வீசப்படாதே. நம் அண்ணன் திரைக்கு ஆ வெளியிலிருந்து தானே அமராவதிக்குப் பாடங் கற்பித்து வருகிறார், மேலும், அமராவதி கைகால் முடமானவளாம், அழகில்லாதவளாம். வேறு பெண்களையும் நம் அண்ணன் அங்கே பார்த்திருக்க முடியாதே.

காவேரி : ஆம், எனக்கும் ஒன்றுமே விளங்கவில்லை. நல்லது! பார்ப்போம், வழி நாட்களில் எல்லாம் விளங்கிவிடும். நள்ளிரவாயிற்று, ஊரெல்லாம் அரவம் அடங்கிப் போயிற்று, ஊர் காவற்காரர் சீழ்க்கையடித்துக் கொண்டு வருகின்றார். அது கேட்டும் அம்புலியைப் பார்த்தும் நாய்கள் குலைக்கின்றன. இனி நாம் விழித்திருக்கலாகாது. உறங்கச் செல்வோம் வா! னி ருவரும் படுக்கைக்குப் போய் விட்டனர்)

(அம்பிகாபதி காதற்காமந் தாங்காமல் தனியே அரற்றுகிறான்)

அம்பிகாபதி : (அமராவதியின் வடிவழகினை நினைந்து) கண்மணி! உன்னைக் கண்மணி என்றழைக்க எனக்கு உரிமையுள்ளதா? நீயோ வேந்தன் மகள்! நானோ ஓர் எளிய புலவன் மகன்! ஆனாலும், யான் நின்மேற் காதல் கொண்டது போல், நீயும் என்மேற் சிறிதாயினுங் காதல் கொண்டால், யான் வேந்தரும் பெறாத பெருஞ் செல்வம் அடைந்தவன் ஆவேன்! ஆம், நீ என்னைத் திரை நீக்கிக் கண்டவுடன் உணர்விழந்து சாய்ந்தது எதனால்? என்மேல் வைத்த காதலினாலா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/139&oldid=1580741" இலிருந்து மீள்விக்கப்பட்டது