உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்பிகாபதி அமராவதி *

107

அல்லது உனக்கு ஆசிரியனாய் அமர்ந்த என்னைக் குருடனாக வைத்துப் பொய்யுரை புகன்றவர் பொய்ம்மைக்கு வருந்தியா? ஆம், உன்னைக் காணாத காலம் வரையில் யான் அகத்தும் புறத்துங் குருட னாகவே இருந்தேன்,உன்னைக் கண்டவுடனே உன்மின் வடிவம் என் அகக்கண் புறக்கண்களின் குருட்டை விரட்டிவிட்டது.

தான்

பேரோளி தன்னிற் பிறங்குருக் கொண்ட பிறைமுடியோன் வாரொளி மின்னில் வகுத்த நின்மேனி வனப்பினியல் காரறல் வெண்பிறை கார்க்கழை நீலங் கனிந்தகொவ்வை ஏரணி முத்தி லிசைதல்கண் டேயிவை ஏத்துவனே.

எழிலின் வளமோ இசைப்ப தரிதாம் இதனொடுநின் கொழிசெந் தமிழின் இயலிசை நாடகங் கூர்த்துணர்ந்த கழிபேரறிவின் றிறமோ பெரிது கலைமகளின்

வழியே பிறந்தாய்! எளியேன் பிழைக்கும் வகையுரையே!

குயில்போற் கூவுங் குரலுடையாய்! யான் ஏது பிதற்றினும் நீ நின்கனிவாய் திறக்கின்றிலையே! இதோ நின்முகம் போல் ஒளிவிடும் இம்மதியமேனும் எனக்கேதேனும் ஓர் ஆறுதல் தருமா? (சிறிது நேரம் மதியினை நோக்கிக் கொண்டிருந்து) ஆ! மதியமே! நினது நிலவொளி எனக்குக் குளிர்ச்சியினையன்றோ தருதல் வேண்டும்? அதற்கு மாறாக என்னை இது சுடுகின்றதே! ஈதென்ன வியப்பு?

சினக்கதி ரோன்றந்த தெள்ளொளி யன்றித் திகழுமொளி நினக்கெனவாயா நிலாக்கதி ரோய்! அந்த நீர்மையினால் எனக்கினித் தீயவ னாயினை! என்போல் இடருழப்போன் றனக்கினி யாருளர் தையலிவனைத் தணந்திடவே!

பாவாய்! இது மதியத்தின் வெம்மையன்று; காதல் நோய் கொண்டாரையே இந்நிலாக் கதிர் வெதுப்புகின்றது! மஞ்சட் காமாலை யுடையவன் கண்களுக்கு எல்லாப் பொருள்களும் மஞ்சள் நிறமாகவே தோன்றுகின்றது. பித்தங்கொண்டவன் நாவினுக்குக் கரும்புங் கசக்கின்றது. இவை போலவே யான் கொண்ட காதல் நோயுங் குளிர்ந்த நிலவை வெம்மை யுடையதாகச் செய்கின்றது!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/140&oldid=1580742" இலிருந்து மீள்விக்கப்பட்டது