உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்பிகாபதி அமராவதி

227

தாங்களெல்லாம் உணவெடுத்து அயர்வு தீர்த்துக் கொள்ளுங் கள். இன்று மாலையில் தங்களை மீண்டும் வந்து காண்பேன். (வணங்கி வேத்தவைக்குப் போய் விடுகின்றான்.)

(கம்பரும் அவர் மக்களும் மருகியுமெல்லாம் அகம் மகிழ்ந்து நிற்கக் காவலாளி அவர்களை வேனில் மண்டப மாளிகைக்கு அழைத்துச் சென்று, அங்குள்ள ஏவலர் பால்விட, அவர்கள் அவர்களை வணங்கி, வரவேற்று, அவர்கட்கு அங்கெல்லா வசதிகளும் விரைந்து செய்து இருக்கை அமைக்கின்றனர்.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/260&oldid=1581193" இலிருந்து மீள்விக்கப்பட்டது