உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228

களம்

ஐந்தாம் நிகழ்ச்சி : ஒன்பதாங் காட்சி

சோழன் அரண்மனைப் பூங்கா

காலம் : விடியற்காலம்

(ஒட்டக்கூத்தருஞ் சோழனும் உரையாடுகின்றனர்.)

கூத்தர் :அப்பா, நான் நினைத்த படியேயாயிற்று, கம்பர் நம்மினும் வலிய ஒரு வேந்தனது துணையை நாடுவ ரென்றேனன்றோ? பிரதாபருத்ரன் எத்தகையவ னென்று நினைக்கின்றாய்?

சோழன் : ஆம், அவன் மிகவலியவன்றான். தமிழறி விலுஞ் சிறந்தவனென்று தமிழ்ப் புலவர்களாலும் பாராட்டப் படுகின்றான். அதனால், அவன் கம்பரைப் பாதுகாத்து அவர் வேண்டும் உதவிகளெல்லாம் முன்நின்று செய்வானென் பதிற் சிறிதும் ஐயமில்லை. அவனை நாடி அவ்வளவு தொலைவிலுள்ள அவனது ஓரங்கல் நாட்டுக்குச் சென்ற அவரையும் அவர்தம் மக்களையும் நம் ஒற்றர்கள் மூன்று திங்களாகத் தேடியுங் கண்டுபிடித்தார்களில்லையே!

கூத்தர் : நம் ஒற்றர்கள்பாற் குற்றமில்லை. கம்பரும் அவர் மக்களும், இந்நகரைவிட்டு வெளியேறின இரவில், அவர்கள் சென்ற வண்டியின் சுவடு கலையும்படி பெருமழை பெய்த தன்றோ? வழிச்சென்ற அடையாளந் தெரியாமல், வழிச்சென்ற வரைக் கண்டுபிடித்தல் இயலுமோ?

சோழன் : உண்மை, உண்மை. அம்பிகாபதியினிட மிருந்தும் நம் அமைச்சர் மகனுக்குச் செய்திகொணர்ந்த தூதுவனாலன்றோ அவனும் அவன் தந்தையும் அமராவதி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/261&oldid=1581194" இலிருந்து மீள்விக்கப்பட்டது