உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்பிகாபதி அமராவதி

229

யும் இருக்குமிடந் தெரியலானோம்; இல்லையேல் வடுக நாட்டுக்குச் சென்ற அவர்கள் இருக்குமிடத்தைக் கண்டறிதல் எளிதில் இயலாததேதான்! பார்த்தீர்களா! அம்பிகாபதி, தானும் அமராவதியும் மற்றவர்களுஞ் சென்று சேர்ந்திருக்கு

மிடத்தை நமக்கெல்லாந் தெரிவிக்கும்படி அஞ்சா நெஞ்சத்துடன் எழுதியிருக்கிறான்!

(பல்லைக் கடித்துக் கையைப் பலகை மேல் அறைகின்றான்.)

கூத்தர் : அப்பா, சீற்றங்கொள்ளாதே. தாம் சார்ந் திருக்குந் துணையின் வலிமை தெரிந்தவர்களுக்கு அத்தகைய மனத்துணிவு தோன்றுதல் இயற்கையேகாண்!

D

சோழன் : ஆம், என் குலத்தினுயர்வும் அரசின் பெருமை யுங் குலைந்துவிட்டனவே! என் மகளை ஓர் ஒச்சப்பயல் உடன்கொண்டு போயதை என் போன்ற ஓர் அரசன் அறிவது எமக்கு எவ்வளவு மானக்கேடு! இதற்கென் செய்வது!

கூத்தர் : அப்பனே, பதறாதே! “பதறாத காரியஞ் சித றாது” நீ பிரதாபருத்ரனுக்கு ஒரு திருமுகம் போக்கு “என் மகளுக்கும் அம்பிகாபதிக்கும் உண்டான காதலன்பின் திறத்தை அறியாமல் யான் செய்த பிழையால் அவர்கள் தங்கள்பால் அடைக்கலம் புகலாயினர். இங்கு எம் அரண்மனையில் நேர்ந்திருக்கும் மனக்கலக்கமும் பெருங்குழப்பமும், அவர்க ளிருவரையும் இங்குவருவித்துத் திருமணஞ் செய்வித்து

டாலன்றித் தீரா. மேலும், புலவர் பெருமான் கம்பர்

L

இல்லாத எனது அ அவைக்களம் மதியிழந்த வான்போற் பொலிவிழந்து புலர்கின்றது! ஆதலால், தாங்களே அவர்களெல்லாரையும் இங்கழைத்து வந்து, எம் புதல்வியை எங்கண்ணும் மனமுங்களிக்க அம்பிகாபதிக்கு மணஞ் செய்வித்து, எமக்கும் எமதரசுக்கும் வந்த பழியையும் இழிவையும் போக்கியருளல் வேண்டும். அமராவதி நுங்கள் மகள். யான் நுங்கள் உடன் பிறப்பு” என்ற அத்திருமுகத்தில் எழுதிவிடு!

L

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/262&oldid=1581195" இலிருந்து மீள்விக்கப்பட்டது