உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8

மறைமலையம் -12

அணிமொழியாந் தமிழொலியில் ஆர்ந்துருகி யவர்மேனி பணியொலியைப் பயந்தநின தருளொளியிற் பாய்வதனை மணிமொழியார் நினதொளியில் மறைந்ததனால் வயக்கினையே

என வாங்குச்

செந்தமிழ் மொழிநின் சீரிய ஒளியில்

முந்துறத் தோன்றிய முதன்மைத் தாகலின் என்றும் நிலைஇய இளமைச் செவ்வியில் தன்னைப் பயிலுந் தகைமை யாளர்க்கு நன்னர் இளமையும் முன்னுபன் னலனுங் குறையற வழங்குங் கொள்கையிற் சிறந்தன்று: இறைவநின் னொளியின் இயக்கமே கூத்தும் அவ்வொளிப் பிறக்கும் இசையே பாட்டும் எனப்படு மாகலின் வனப்புற விரண்டுஞ் சேர்ந்தொருங்கு பயிலுஞ் சிறப்பிற் றென்ப நாடகத் தழிழென நவிற்று மதுவே; அதுதான் பண்டை முதுதமிழ் வழக்கிற் பொதுவுற மாந்தர் புகுநிலை யெல்லாம் அகத்திணை மேல்வைத் தறைவ தல்லது புறத்திணை மருங்கிற் பொருந்த வைத்துச் சிறப்புடைச் சிலர்திறஞ் செப்பியதின்றே; அதனாற் கம்பன் பயந்த அம்பிகா பதியுஞ் செம்பியன் புதல்வி அமரா வதியும் ஆராக் காதலிற் பேராது மரீஇய காத லொழுக்கம் மேதகு நின்னொளி விளக்கத் தெழுந்த எழிலின் விளைவாய், ஒளிவளர் ஒலியாந் தெளிதமி ழிசையால் ஈருயிர் ஓருயிராகப் பெற்ற

இன்ப நிலையின் இறுதிப் படியாய் மன்பதை யுலகின் மன்னுவ தோராது, மன்னா மன்னர் நிலையிற் செருக்கிச் சோழன் இழைத்த பாழுஞ் செயலால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/41&oldid=1580605" இலிருந்து மீள்விக்கப்பட்டது