உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

குமுதவல்லி நாகநாட்டரசி

157

"ஆ! ஏதோ தற்செயலாக நீ என் கம்பீரநாயகனுக்குத் தப்பி வந்துவிட்டாய். ஆகையால் நான் உன்னைச் சந்திக்கலானது அதிட்டவசந்தான்.” என்று தனக்குள் எண்ணிக்கொண்டாள்.

மிகவும் விரும்பத்தக்க உபசாரத்தோடும் ஒரு நொடிப் பொழுதில் முன் வந்து எதிர்கொண்டு வாழ்த்திய அவ்வழகிய நங்கையின் உள்ளத்தில் இங்ஙனம் புரண்டு கொண்டிருந்த இரண்டகமான எண்ணங்களைப் பற்றிக் குமுதவல்லி ஒரு நிமிடமேனும் ஐயுறவுகொள்ளக்கூடவில்லை. குமுதவல்லியும், அவள்பாங்கிமாரும் விருந்தோம்பும் அம்மலைய நாட்டு விதவையின் மனையகத்தைவிட்டு மனையகத்தைவிட்டு வந்தபோது தாங்கள்

நகரத்திலாயினும்

முதலிற்போய்ச்சேரும் ஊரிலாயினும் வழித்துணைபெற்றுக் கொள்ள எண்ணியிருந்தார்கள் என்பதைப் படிப்போர் நினைவுகூர்வர். ஆனால் அவர்கள் அம்மலைய நாட்டுவிதவையால் குறித்துக் காட்டப்பட்ட வழியைவிட்டுத் தற்செயலாய்ப் பிசகி வந்துவிட்டார்கள். அவர்கள் ஊரையாவது நகரத்தையாவது சேர்ந்திலர்-- அவர்களும் அவர்கள் குதிரை களும் உணவு கொள்ளவேண்டிய வரானார்கள் - ஆகவே தங்குவதற்கு ஏற்ற ஓர் இடத்தை அவர்கள் நாடுஞ்சமயத்தில் அவ்வோடையின் கரை மருங்கில் மீனாம்பாளைக் கண்ணுற் றார்கள்.

தம்முடைய குதிரைகளினின்றும் கடுகெனக் கீழ்இழிந்து தம்மைப்போலவே பெண்பாலரா யிருத்தலால் தங்கருத்துக்கு இயற்கையாகவே இணங்கினதுணைவர் கிடைத்த இச் சமயத்தை அவர்கள் உடனே பயன்படுத்திக் கொண்டார்கள். சுந்தராம் பாள் ஞானாம்பாள் இருவரும் அந்த காப்பிரி மாதோடு இருக்கலாயினர். மலைநாட்டுப்பணிப்பெண்ணோ சிறிது தூரத்தில் மரப்பந்தரினிடையே போயிருந்தனள். அழகிய குமுதவல்லியே விழுமிய மீனாம்பாள் பக்கத்தே அந்நீரோட்டத் தின் கரைமீது அமர்ந்தனள்.

ஆ! குமுதவல்லி! நீ இங்ஙனம் நினக்குத் துணைவியாகக் காள்ளும் அவ்வழகிய மாது, மாதரழகின் இரண்டு சிறந்த மாதிரியாய் அங்குள்ள இருவரில் எவருடம்பிலே தன் கொலைப் பற்களை ஊன்றல் வேண்டுமென்று ஐயுறவு கொண்டார் போலநின்று சிறிது தூரத்திற் புற்களின் ஊடே அரவம் இன்றிக் கரவாய் நுழைந்துவரும் அக்கரிய நச்சுப்பாம்பைப்போல் வஞ்சனையுடையள் என்பதை நீ சிறிதும் நினைந்தாய் இல்லை!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/186&oldid=1581459" இலிருந்து மீள்விக்கப்பட்டது