உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158

அதிகாரம் – 10

குமுதவல்லியும் மீனாம்பாளும்

மீனாம்பாள்

மிக்கமரியாதையோடும்

குமுதவல்லி யினிடத்துக் கவனங்காட்டிவருகையிலேயே தன் கள்ளவுள்ளத் தில், நாகநாட்டரசியையும் அவள் பாங்கிமார் இருவரையும் தன்னிடத்திற் சிறைப்படுத்துவதற்கு எவ்வகையான தந்திரம் நன்றாய்ச் செய்யலாம் என்று சிந்திப்பாளானாள். பலவந்தமாகச் செய்வதைப்பற்றி நினைத்தலுங்கூடாது, ஏனென்றால் இரண்டு பக்கத்தும் மும்மூன்று பெயர் இருந்தனர். வீரமகளுக்குரிய வீரச்செய்கையின் துணிகரத்தை மீனாம்பாள் மீனாம்பாள் காட்டக் கூடியவளா யிருந்தாலும், அதனை இங்கே காட்டினால் வெற்றி யுண்டாமென்பது தூரத்தோற்றமாகவே இருந்தது. அதுவே யன்றியும், ஏதேனும் ஓருபாயம் செய்யப்படுதல் வேண்டுமென அவள் ஏற்கனவே தன்னுள்ளத்தில் உறுதி செய்துவிட்டாள், ஆகவே, குமுதவல்லியை முழுதும் நம்பச் செய்தது, அவளுக்குத் துணைப்பயணம் போவதுபோற் காட்டிக் கொண்டுபோய் அவளை ஓரிடத்திற் சிறிதுநேரம் சிறையிட்டு வைப்பதே னிதுசெய்யக்கூடிய உபாயமாகத் தோன்றியது.

பலநிறமணிகள் பதித்தாற்போலப் பூக்கள் மலிந்த புல் நிலத்தின்மேல் சாப்பாடுகொண்டுவந்து பரப்பும்படி மீனாம் பாள் தன் பணிப்பெண்களுக்குக் கட்டளையிட்டாள்; இளைய நீலலோசனனிடத்துத்தான் அத்தனை திறமையோடுங் காட்டிய இன்சொல் உபசாரத்தைப் போலவே, இந்தச் சிற்றுணவு விருந்திலும் அவள் உபசாரங்காட்டினாள். அவர்களது சம்பாஷணை பொதுவான விஷயங்களைப்பற்றியே நடந்தது. னெனில் குமுத வல்லி இனித்தான் முழுவதும் தொடர்பாக எச்சரிக்கையோடு இருக்கவேண்டுமென்றும், யாரிடத்தும் சிறப்பாகப் பேசலாகா தென்றும், வெளிக்கு நண்பரைப்போற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/187&oldid=1581460" இலிருந்து மீள்விக்கப்பட்டது