உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமுதவல்லி நாகநாட்டரசி

159

பூண்ட கோலத்தில் எல்லாம் ஒளிப்பான பகைவனொருவன் மறைந்திருக்கக் கூடுமென நினைந்தே நடக்கவேண்டுமென்றும் ஏற்கனவே தீர்மானஞ் செய்து கொண்டாள். தான் இப்போது நட்புக்கொள்ள நேர்ந்த நங்கையைப்பற்றி நாக நாட்டரசி ஒரு நிமிஷமேனும் ஏதும் கெடுதலாக நினைந்தவலல்லள்; ஆனாலும் தன்புதிய அனுபவங்களால் தான் விழிப்பாகவும், எச்சரிக்கை யாகவும் இருக்கப் பெற்றாள். ஆயினும், அவநம்பிக்கை கொண்டிலள்.

-

ஏதேனும் ஒன்றைக்குறித்துப் பேசப் புகுந்தால் தன்னிடத்து ஏதோ முடிவான நோக்கம் உண்டென்று சமுசயங் கொள்ளப் படுமென அஞ்சினவளாய் மீனாம்பாளும் அவ்வாறே பொது விஷயங்களைப்பற்றிப் பேசுவதில் மிகவும் பிரியமுடையவளா யிருந்தாள். குமுதவல்லியின் உள்ளத்தில் தான் அச்சத்தைப் புகட்டுவதாக முடியுமென்று அஞ்சி, இங்ஙனம் அவள் கள்வர்தலைவன் நல்லான் பெயரைக் கூடச் சொல்லாது விட்டாள்; ஏனென்றால் அத்தகைய அச்சங்களே ஐயமுறுதற்கு இடஞ்செய்யும். மீனாம்பாள் முதலிலே நல்லகுணமும் கற்பொழுக்கமும் உடையளாயிருந்தாள்; ஆனால், அவள் தன் கணவன் நல்லான்மேல் வைத்தகாதலானது அளவுகடந்த அற்புத ஆற்றலுடையதாய் எழுந்தமையினாலே, அது மற்ற எல்லா உணர்வுகளையும் மற்றெல்லா ஆலோசனைகளையும் தன் கீழ்ப்படுத்தி நின்றது. அவளது முழுவாழ்வினோடு முழுதும் பிணைந்து, அவளது முழுவுயிரோடு முழுதும் பின்னப்பட்டு அக்காதல் வளர்ந்து முதிர்ந்தமையால், அவள் அதற்கென்றே உயிர்பிழைத்திருப்பாளானாள். அதனால் அவள் தன் கணவன் விருப்பத்திற்கு இணங்கிப் படிமானம் உள்ளவளாய் எந்த வகையான குற்றத்தைச் செய்யவும், எந்தவகையான பழிச் செய்கையை அணுகவும் ஒருப்படுவாளானாள்; என்றாலும், அவள்தன் நல்லொழுக்கங்கள் அவளை விட்டு இன்னும் முற்றும் அழிக்கப்படவில்லை - அவை அவள்தன் காதற் பெருக்கத்தின் வயப்பட்டுச் செயலிழந்து மாத்திரங் கிடந்தன.

இப்பொழுதோ தனக்கெதிரே யிருந்த பதினேழுவயதுள்ள அவ்வழகிய பெண்ணை நோக்கிச் சிந்திக்கையில் மீனாம்பாள் நெஞ்சத்தில் அந்த நல்லுணர்வுகள் சிறிதே கண்விழித்து எழுவ வாயின.பெண்டண்மையோடிருந்து பார்ப்பவர் நெஞ்சத்தையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/188&oldid=1581461" இலிருந்து மீள்விக்கப்பட்டது