உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160

❖ LDMMLDMELD - 13❖ மறைமலையம்

உருகச் செய்யும் ஓர் ஒப்பற்ற பெண்மையழகிலே ஏதோ இருக்கின்றது. அவ்வழகிய கண்களிலிருந்து நீர் வரச்செய்வதும்- அவ்வழகிய முகத்தை வருத்தத்தோடு சுளிக்கச் செய்யும் எதனையாவது புரிதலும் அல்லது அக்கன்னிமை நெஞ்சத்தைக் கலங்கச் செய்வதும் ஒரு பெருங் குற்றமாகும் என்று, உயிர் தனக்குத்தானே சொல்லிக்கொள்வது போற் காணப்படு கின்றது. குமுதவல்லியின் மிக உயர்ந்த வசீகரத்தைத் தான் நோக்கியபோது மீனாம்பாள் தன் நெஞ்சத்தே இத்தன்மை யவான நினைவுகள் வந்து நுழையாமற் றடுக்கக்கூடவில்லை. நாகநாட்டரசியைப் பற்றித் தான் சிறிதும் பொறாமை கொள்ளாமையால், அவள் இச்சமயத்தில் அங்ஙனம் உணர்ந்து உள்ளங் கசிவதற்கு மிகவும் இடம் பெறுவாளாயினாள். அவள் தற்பெருமை, அல்லது தான் அழகுடையவள் என்பதைப் பற்றிய செருக்குக் கொண்டவளாகவே யிருந்தாள். குமுதவல்லி ஒருவகையான வளப்பின் முதிர்ந்த மாதிரியாகத் தோன்றியது போலவே, தானும் வேறொரு வகையான அழகின் முடிந்த மாதிரியாக உள்ளவள் என்று நினைந்தாள். நல்லானும் நாக நாட்டரசி குமுதவல்லியைப் பார்த்தான்; அவள் அப்பெயர் பெறுதற்குப் பெரிதுந் தகுதியானவளேயென்று அவன் மீனாம்பாளிடம் சொல்லத் தாமதிக்கவில்லை; ஆயினும் உலகத் தில் உள்ள எந்த மக்கட்பிராணியும் தன் மனைவியைப்போல அத்துணை அழகுள்ளதாக வேனும் நேசிக்கத்தக்கதாவேனும் தன்மதிப்பிற் றோன்ற மாட்டாதென்று அவன் அதே சமயத்தில் தன் மனைவியிடம் உறுதிமொழி புகன்றான். ஆதலினாற்றான் மீனாம்பாள் குமுதவல்லியின் வசீகரத்தைப் பற்றி பொறாமை யாவது மனப்புழுக்கமாவது கொண்டிலள்; ஆகவே, அவள் உள்ளத்திற் சிறிது சிறிதாக அவிழ்ந்து விரியும் இரக்கம் என்னும் அம்மெல்லிய மலரை வளராமல் அழுக்குவதற்குக் கொழுத்த களைப் பூண்டுகளேனும் முட்களேனும் அங்கில்லை. தான் நல்லானுக்கு மணமகளாய் வந்த நாள் தொட்டு இதுவரையில் இம் முறை தான் அவள் அவனது அலுவல் மிக்க துணிகர வாழ்க்கையினால் தானும் அடிக்கடி சேரும்படி கட்டாயப் படுத்தப்படும் உபாயங்களை வெறுக்கத் தலைப்பட்டாள். ளைய நீலலோசனனைத் தன்னுடைய மயக்குவித்தைகளால் ஏமாற்றும் பொருட்டுக் காதல் மொழிகளைச் சொல்லும் போதும் கண்ணெறியும்போதும் அவள் தன் நெஞ்சத்திற்குச்

.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/189&oldid=1581462" இலிருந்து மீள்விக்கப்பட்டது