உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமுதவல்லி நாகநாட்டரசி

6

161

செய்த கொடுமை சிறிதன்று; ஏனென்றால், பெண்பாலியல்பில் மீனாம்பாள் கடுங் கற்பொழுக்கம் உள்ளவள், மனையாளியல் பில் தன் கணவனிடத்து மாசற்ற அன்புள்ளவள். இதனைப் படித்தோர் தெரிந்து கொண்டபடி குறிப்பிட்ட ஒரு நோக்கத்தை நிறைவேற்றும் பொருட்டும் விவகார சாமார்த்தியத்தினாலும் அவள் அப்பொழுது அங்ஙனம் நடந்து கொள்வாளானாள். அப்போது அவள் தன்நெஞ்சத்திற்குக் கொடுமை செய்தன ளாயின், இப்போது தன் அப்பத்தையும் உப்பையும் தின்ற அழகிய களங்கமற்ற இளம்பெண்ணுக்குத் தான் இரண்டகமாய் நடக்கவேண்டி யிருத்தலைப்பற்றித் தன்னையே தான் இன்னும் மிகுதியாய் அருவருப்பாளானாள். சில சமயங்களில் குமுதவல்லியின் இசையினிமை வாய்ந்த குரலொலியானது காந்தருவ கானத்தைப்போல மீனாம்பாள் செவிகளிற் சென்று ஒழுகினது - வேறு சில சமயங்களிற் குமுத வல்லியின் பெரிய நீல விழிகளின் மெல்லியல் நோக்கமானது அவள்மேற்சென்று இனிது வைகிற்று மற்றுஞ் சில சமயங் களில் குமுதவல்லியின் இங்குலிகம் போன்ற இதழ்களானவை மிக இனியகுறுமுறுவல் முகிழ்த்தன அத்தகைய சமயங்களி னெல்லாம் மீனாம்பாள் தன் நெஞ்சம் அவ்விளம் பெண்மேல் ஆவல்கொள்ளக் கண்டாள். அப்போது அவள் அவளைத் தன் மார்புறத் தழுவி யிருக்கக் கூடும் - மிகவும் நேசிக்கப்பட்ட தன் ஒரு சகோதரியைக் கட்டியணைக்கும் அத்தனை வேட்கை யோடும் அவளையும் அணைத்திருக்கக்கூடும் -அவள் செல்லும் வழியைச் சூழ்ந்திருக்கும் மோசங்களைக்குறித்து அவளை எச்சரித்து மிருப்பள்.

ஆனால் இல்லை! - மீனாம்பாள் அங்ஙனம் நடக்கவில்லை. அவளது தீவினையின் வலியானது இன்னும் முதன்மை பெற்று நின்றது. அவள் நல்லான்மேல் வைத்திருந்த காதலே அவன் விருப்பத்திற்கு மாறு பேசாமல் கீழ்ப்படியவும் அவன் பற்று வைத்தவற்றில் தானும் பற்றுவைத்தொழுகவும் பிணையாய் இருந்தது. என்றாலும் அப்போதிருந்த அவள் மனநிலையானது அவள் நல்லொழுக்கங்களை எல்லாவற்றிற்கும் மேலே எழச்செய்து அவள் நல்உணர்வுகளுக்கு ஆட்சி தரற் பொருட்டு ஒரு சிறு நற்சமயத்தை மாத்திரம் அவாவி நின்றது.

6

சாப்பாடு முடிந்தது; இப்போது இவ்விரு நங்கைகளின் பாங்கிமாரும் சிறிது தூரத்தில் ஒருங்குசேர்ந்து விருந்துண்

-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/190&oldid=1581463" இலிருந்து மீள்விக்கப்பட்டது