உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

L

162

மறைமலையம் 13

டார்கள்; மீனாம்பாளுங் குமுதவல்லியும் இன்னும் அந் நீரோடையின் கரை மருங்கே உட்கார்ந்திருந்தனர். அக்கள்வர் தலைவன் மனைவியானவள் திரும்பவும் பயணந் தொடங்க வேண்டும். அவசியத்தைப்பற்றித் தான் பேசும் வகையிலே சம்பாஷணையைத் திருப்புதற்கும், அதனால் குமுதவல்லியின் வாயின் நின்றே அவள் தானும் நீலகிரிக்குப் போவதை வருவித்தற்கும், அவ்வாற்றால் வழியிலே துணை கூடிச்செல்லுங் கருத்து மொழியப்படுதற்கும் ஆனவிதமாய்ப் பேசத் துவங்கினாள்; ஆனால் அச்சமயத்தில் அவ்விடத்தில் வேறோர் ஆள்வந்து தோன்றலாயிற்று.

இஃது ஒரு துருக்கி தேசத்துப் பெண்பிள்ளை; இவள் தான் அணிந்திருந்த உடுப்பினாலும் தன் கையிற்கொண்டு செல்லும் ஒரு சிறு சந்தனப் பெட்டியினாலும், ஆசியாக் கண்டத்தும் அதனை யடுத்த நாடுகளினும் மருந்துச் சரக்குகளும், வாசனைக் கூட்டுகளும், மருந்துகளும் விற்றற் பொருட்டுச் சுற்றித் திரியும் அறிவான் மிக்க பெண் மக்களுள் ஒருத்தியாகக் காணப்பட்டாள். இப்போது நாம் குறிப்பிட்டு பேசும் இப்பெண்மகள் நடுத்தர வயதும், நீண்டு நேரான வடிவும் உள்ளவள்; சணல் நூற்புடவையால் தன்முகத்தின் பெரும் பாகத்தை வழக்கமாய் முக்காடிட்டிருந்தாலும் மங்கலான நிறம் உடையவள்.

அவள் அவ்விரண்டு நங்கைமாரையும் அணுகி மலைய கி மொழியில், “அழகுள்ளவர்களே, என்னுடைய சாம்பிராணி வர்த்திகளையேனும் வாசனைக் கூட்டுகளையேனும் வாங்கிப் பாருங்கள்! எல்லாக் காயங்களையும் ஆற்றும் என்னுடைய ய தைலங்களையேனும், எல்லா விஷங்களுக்கும் மாற்று மருந்தான என் சூரணங்களையேனும் வாங்கிப் பாருங்கள்! - அல்லது உங்கள் அலங்கார மேசைகளுக்குச் சிங்காரமாய் வைக்க அழகான அம்பர்த்துண்டுகளும் என்னிடம் விலைக்கு இருக்கின்றன. நீங்கள் கலியாணமானவர்களாயிருந்தால் உங்களுக்குக் கணவன்மார் அங்ஙன மில்லாவிட்டால் உங்களுக்குக் காதலர் இருப்பர் அவர்களுக்கு நீங்கள் என் அழகிய அம்பரை இனாமாகக் கொடுக்கலாம். திகழ்கலையின் சாக்குகளிற் சிலவற்றை வந்து வாங்குங்கள்! அலைந்து திரியும் திகழ்கலைக்கு ஒரு நல்ல உதவியைச் செய்வது அதிர்ஷட மாகும்!” என்று

இருப்பர்

-

-

சொன்னாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/191&oldid=1581464" இலிருந்து மீள்விக்கப்பட்டது