உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமுதவல்லி நாகநாட்டரசி

163

இவளை யொத்த அறிவான மிக்க பெண்பிள்ளைகள் இங்ஙனம் பசப்பிப் பேசுவது வழக்கத்தில் இல்லாவிட்டால், காதலர் இருக்கக்கூடிய விஷயத்தைப் பற்றித் திகழ்கலை பேசிய ஒரு பகுதி ஏதோ மரியாதையற்றதாக வாயினும் நாகரிக மில்லாததாக வாயினும் காணப்பட்டிருக்கும். இதுதான் வழக்க மென்பது குமுதவல்லிக்கும் மீனாம்பாளுக்கும் தெரியும்; அதனால், திகழ்கலைகிட்ட நெருங்கிவந்தபோது குமுதவல்லி நல்ல குணத்தோடு நகைத்தாள். மீனாம்பாளும் அங்ஙனமே நகைத்தாள். -ஆனால் மரியாதையோடும் எச்சரிக்கையோடும் மாத்திரம் அணுகற் பாலகான ஒரு விஷயத்தைக் குறித்துத் தான் அத்தனை திறமையோடும் சம்பாஷணையைத் திருப்புகிற சமயத்தில் நேர்ந்த இவ் இடையூற்றால் தான் அடைந்த கவலையை மறைப்பதற்காகவே இவள் அங்ஙனம் நகைத்தாள். திகழ்கலையோ ஒருவரோடு மற்றவரும், நகைத்ததனால் உள்ளத்தில் உற்சாசங் கொள்ளப் பெற்றாள்; உடனே தான் புல்லின்மேல் உட்கார்ந்து கொண்டு தனது சிறிய சந்தனப் பேழையைத் திறந்தாள்.

66

-

இதோ கலப்பில்லாத சிறந்த சுத்தமான குலாப்பூவின் அத்தர் அமைத்த சிறு குப்பிகள். இதோ மிகக் கொடிய விஷத்தையும் கடுக மாற்றும் மருந்துகளாகிய சூரணங்கள். பாண்டி தேசத்து அதிபதிக்கு ஆறுமாதத்திற்கு முன்னே ஒரு மோசக்கார அடிமை ஒரு கிண்ணம் பானகத்தில் தந்திரமான ஒரு நஞ்சைக் கலந்து கொடுத்தபோது அதை நான் இதனால் தீர்க்கவில்லையா? இது திகழ்கலையின் புகழை மிகுதிப் படுத்தவில்லையா? இதோ, பெருமாட்டிகளே, சிறிது முன்னே நான் சொல்லிய சிறந்த அம்பர்த்துண்டுகள். ஆண்டவன் அறிய இவைகள் பளிங்குக் கல்லைப்போல எவ்வளவு தெளிவாய் இருக்கின்றன!” என்று அவள் மொழிந்து, பயபத்தியிற் சிறந்த பார்வையோடுங் குரலோடும் மருந்துவைக்கும் சிறு பரணிகள் இரண்டு மூன்றைக் கையில் எடுத்து, “இதோ ஒரு மருந்து, இதிற் சேர்ந்திருக்குஞ் சரக்குகள் அலைந்து திரியும் திகழ்கலைக்கு மாத்திரந்தான் தெரியும்! தெரியும்! இந்தப் பரிதன திரவியத்தை இவ்வுலகத்திலுள்ள எல்லா உயிர்களிலும் திகழ்கலை மாத்திரமே செய்யத் தெரிந்தவள்." என்று தொடர்ந்து சொன்னாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/192&oldid=1581465" இலிருந்து மீள்விக்கப்பட்டது