உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164

மறைமலையம் 13

இந்தப் பசபசப்புப் பேச்சில் தனக்குப் பிரியமேனும் மகிழ்ச்சியேனும் இல்லாவிட்டாலும், அந்தப் பெண்பிள்ைையப் பிரியப்படுத்த வேண்டுமென்னும் நற்குணத்தால் “அஃது எங்ஙனம் வந்தது திகழ்கலை; இவ் வற்புத மருந்துமுறை உன் வசத்தில் எவ்வாறு வழிதேடி வந்தது?” என்று குமுதவல்லி

வினவினாள்.

"ஆ! பெருமாட்டி, அஃது என்னிடத்தே மாத்திரமுள்ள மறைபொருள்!” என்று இரகசியக் குறிப்புமிக்க பார்வையோடு மறுமொழி கூறுவாளாய்ப் பின்னும், “என்றாலும், இந்தப் பரிமள திரவியம் மேலான நற்குணங்கள் உள்ளதென்று ஆண்டவன் அறிய ஆணையிட்டுச் சொல்லுகின்றேன்! இந்த மேற்கணவாய் மலைப் பக்கங்களில் நன்குமதிக்கப்படுகின்ற பூர்ச்சமரத்தின் வெள்ளைப்பட்டைச்சாறு இவ்வுயர்ந்த பரிமள திரவியத்தின் கலவையிற் சேர்ந்திருக்கிறதென்று திறந்து சால்ல

நான்

பின்வாங்கவில்லை;

இன்னும்

இதிற்

கலக்கப்பட்டுள்ள பூண்டுகளும் மருந்துகளும் மற்றும் பல உண்டு; அவைகள் இவ்வெள்ளைப் பூர்ச்சமரத்தின் நோய் ஆற்றுந் தன்மையினும் மிக உயர்ந்தனவாகும். பதினெட்டு மாதங்களுக்கு முந்தி மிகவும் மறைவான நிலைமையில் கிழவன் ஒருவனை இந்த உறையைக் கொண்டு யான் நோய் தீர்க்கவில்லையா?” என்று எடுத்துரைத் தாள்.

"நீ அங்ஙனஞ் சொன்னால், திகழ்கலை, அஃது உண்மையாகத் தான் இருக்க வேண்டும்; ஏனென்றால், நீ பொய்சொல்லத் தெரியாதவள் என்று யான் உறுதியாக நம்புகிறேன்.” என மீனாம்பாள் மொழிந்தாள்.

"பெருமாட்டி, நீங்கள் என்னை இறக்கிப் பேசிக் கேலி செய்கிறீர்கள்; ஆனாலும், அது நான் சொல்லுகிறபடியேதான் உள்ளதென்று கடவுளறிய ஆணையிடுகிறேன்!" என்று அவ்வறிவோள் விடை பகர்ந்தாள்.

“எப்படி அந்நிலைமை அவ்வளவு புதுமையா யிருந்தது?” என்று குமுதவல்லி கேட்டாள்.

ரு

திகழ்கலை உடனே நாகநாட்டரசியின் மேல் ஒரு புதுமையான பார்வையைச் செலுத்தினாள்: அதன்பிறகு, அறிவுக்குத் தென்படாத அதே ஆழ்ந்த நோக்கத்தை மெல்ல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/193&oldid=1581466" இலிருந்து மீள்விக்கப்பட்டது