உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமுதவல்லி நாகநாட்டரசி

165

மீனாம்பாள்மேல் திருப்பினாள்; இங்ஙனஞ் சிறிதுநேரம் பெரிதும் வாய்பேசாதிருந்தாள்.

கடைசியாக அவள் வாய்திறந்து அமைதி மிக்க குரலோடு, "பெருமாட்டிகளே, புதுமையான ஒரு கதையைக் கேட்க உங்களுக்கு ஓய்வும் விருப்பமும் இருந்தால், நான் அதனை விரித்துரைக்கின்றேன். ஆண்டவன் அறிய அஃது உண்மை யென்றே ஆணையிட்டுச் சொல்லுகின்றேன்! யான் உயிரோடி ருப்பவளாயினும், உண்மை நம்பிக்கையுடையவர்கள் இறந்தபின் செல்லும் இறைவன் துறக்க வுலகத்தைப்பற்றி ஒரு சிறிது தரியப்பெற்றிருக்கின்றேன் என்னும் நம்பிக்கையினின்று என்னை எதுவும் பிறழ்த்தமாட்டாது” என்று கூறினாள்.

திகழ்கலை கூறிய இப்புதிய சொல்லைக் கேட்டவுடனே மீனாம்பாள் தானுந் தன் கணவனும் சிலநாளாகப் பெறுதற்கு ஆவலுற்றிருக்குந் துறக்க நிலத்தின் காட்சிகளோடு தெளிவுந் திட்டமும் இன்றி இதனை இயைபுபடுத்தினவளாய் “உண்மை தான்!” என்று திடுமென மொழிந்தாள்.

தான்

மேன்மைமிகுங் கனவைப்போன்ற அத்தகைய எண்ணங்கள் தன்னுள்ளத்தின்கண் மிதக்கப் பெறாதவளா யிருந்தும் குமுதவல்லியுங்கூடத் திகழ்கலை மொழிந்தே புதுமையும் மறைபொருளும் உள்ள அச்சொற்களைக் கேட்டு அதனை அறியும் வேட்கையுடையளானாள்; ஆகவே, அவ் விரண்டு நங்கைமார்களின் பார்வைக் குறிப்பினாலேயே அக்கதையை எடுத்துரைக்கலாமென்று அம்மேதக்காள் கண்டுகொண்டாள். தன் மருந்துகளின் திறனை உறுதிப்படுத்திக் காட்டுதற்கும், ஒருநாழிகை நேரம் இனிதாகக் கழியவேண்டித் தான் எடுத்துக்கொள்ளும் முயற்சிக்குத் தக்க ஈடாகப் பரிசு பெறுதற்கும், மெய்யோ பொய்யோ அக்கதையைச் சொல்லு தற்கு நுணுக்கமாக அவள் வழி பிறப்பித்துவிட்டாள்.

"பதினெட்டு மாதங்களுக்கு முன்னே” என்று துவங்கி அந்நல்லோள் அக்கதையைச் சொல்வாளானாள்: “மிகவுங் கடுமையான ஒரு மழை காலத்தின் நடுவிலே யான் நீலகிரி நகரத்தில் இருக்கும்படி நேர்ந்தது. அப்போது அங்கே எல்லாரும் நேர்ந்தது.அப்போ மெச்சத்தக்க வகையாய்ச் சில நோய்களை நீக்கினேன்; அதனால் என் புகழ் வெளியூர்களிற் பரவிற்று. ஒருநாள் அவ்வூரிலுள்ள

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/194&oldid=1581467" இலிருந்து மீள்விக்கப்பட்டது