உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166

மறைமலையம் 13

பெரியவர் ஒருவர் யான் தங்கியிருந்த இடத்திற்று வந்து, தான் என்னைப்பற்றிக் கேள்வியுற்ற எல்லாவற்றாலும் குறிப்பான ஓர் அவசரத்தின்பொருட்டு என்னைக் கலந்துகொள்ளும்படி செய்விக்கப்பட்டதாகத் தெரிவித்தனர். அதற்கு, மக்களுக்குள்ள கருவிகளைக்கொண்டு போராடக்கூடிய எவ்வகையான அவசரத்திலும் யான் உதவத்தக்க திறமை வாய்ந்தவள் என்பதை அவருக்கு உறுதிகட்டிச் சொன்னேன். தான் செல்லும் வழியைக் கையாற்றடவிப் பார்த்துச் செல்வதுபோலவும், தான் இன்னுந் சிறப்பாகப் பேசுவது தனக்குத்தகுமா வென்றும் தான் தெரிவிக்கப்போகும் கருத்துக்களோடு யான் ஒட்டி வரக்கூடுமா வென்றும் திண்ணமாக அறிந்துகொள்ளுதற்கு என்னை ஆழம் ன பார்ப்பதுபோலவும் முதலில் அவர் தற் காவலோடும் எச்சரிக்கையாக பேசினார். நங்கைமார்களே, எம்மிருவரு க் குள்ளும் நடந்த பேச்சுமுழுதுஞ் சொல்லி உங்களை நான் வருத்தவேண்டுவதில்லை.யான்செய்யும்படி கேட்டுக் கொள்ளப் பட்டஉதவியின் தன்மை இதுவென்று உடனே சொல்லிவிடுவதே எனக்குப் போதும். தம்மோடு நான் சிறிது நெடுந்தூரங் கூடவே வரவேண்டுமென்றும், சிலதூரம் சென்ற வுடன் யான் கண்ணைக் கட்டிக்கொள்ள இசையவேண்டு மென்றும் அப்பெரியவர் - அவர் பெயரை யான் சொல்லாது விட்டதற்காக நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும் உடன் படிக்கை செய்துகொண்டார்.யான் நலப்படுத்தும்படி கேட்டுக் கொள்ளப்பட்ட நோயாளியை யான் அதன் பொருட்டுப் பார்க்கவேண்டுவது மிகவும் இன்றியமை யாததா யிருந்தமை யால், யான் இந்த வகையாகவே அழைத்துக் காண்டு போகப்படல் வேண்டும். இதற்கெல்லாம் நான் இணங்கினால் ஏராளமான தொகை எனக்குக் கைம்மாறாக அளிக்கப்படும்: நான் குறிப்பிட்ட அப்பெரியவர் நேசத்தில் பின் எப்போதும் நான் நம்பிக்கை வைத்திருக்கலாமென்றும் வலியுறுத்திச் சொல்லப்பட்டேன். நல்லது, பெருமாட்டிகளே, இஃது என்னைப் பிடிக்கும்படி செய்த உபாயம் ஆகமாட்டா தென்றும் எண்ணிப் பார்த்தேன்; ஏனெனில் அப்பெரியவர் நாடெங்கும் நன்கு மதிக்கப்பட்டவர்; மேலும் அலைந்து திரியும் ஏழையான அறிவோள் ஒருத்தியின் உயிரை வாங்குவது அவருக்கு யாது பயனைத் தரும்? ஆகவே, நான் இசைந்தேன்; அவர் தமது ஈகைக்கு அறிகுறியாக அச்சாரமும் கொடுத்தார். மாலைப் பொழுதின் இருள் வந்தவுடனே, அப்பெரியவர் என்னை

வி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/195&oldid=1581468" இலிருந்து மீள்விக்கப்பட்டது