உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமுதவல்லி நாகநாட்டரசி

167

அழைத்துக்கொண்டு போக வந்தார். கடுகிச் செல்லும் வலிய குதிரைகளின்மேல் தனித்தனியே ஏறிக்கொண்டு நாங்கள் இருவேமும் நீலகிரியை விட்டுச் சென்றோம். இரவுமுழுதும் வழிச்சென்றோம்; காலைப்பொழுது வந்தவுடனே மேற் கணவாய் மலைக் காடுகளின் இடையே நாங்கள் இருந்தோம். சிலநாழிகை நேரம் பெருங்குகை ஒன்றிலே நாங்கள் இளைப் பாறி யிருந்தோம்;யான் முன்னமே உங்களுக்குச் சொல்லியபடி மழைக்காலம் மிகவுங் கடுமையாய் இருந்தமை யால், நாங்கள் ஏறக்குறையக் குளிரினால் மடிந்துபோவோம் போலிருந்தது; அதனால் அப்பெரியவர் அங்கே தீமூட்டினார். உணவுக்கு வேண்டிய நல்ல பண்டங்களும், சிறந்த பானகங்களும் அவர் கொண்டுவந்திருந்தார். ஆகவே, நாங்கள் குளிர்காய்ந்து மகிழ்ச்சியோடு வசதி பெற்றிருந்தோம். நாங்களும் எங்கள் குதிரைகளும் போதுமான அளவு இளைப்பாறி உணவு கொள்ளும் பொருட்டுப் பலநாழிகை நேரம் அக்குகையிலே தங்கி யிருந்தோம். கடைசியாக எங்கள் பயணம் தொடங்க வேண்டி வந்தபோது என் விழிகளின்மேல் துணிகட்டவேண்டிய நேரமும் வந்ததென்று கண்டு கொண்டேன். இரண்டகமாய் நடக்கும் எண்ணம் இருந்தாலும் யான் விழி திறந்து காணக்கூடாதபடி அவ்வளவு செவ்வையாகக் கண்கட்டப் பட்டேன். பெரு மாட்டிகளே, உங்களை நான் அலுப்படையச் செய்யவில்லை யென்று நம்புகின்றேன்?”

“இல்லை, இல்லை! என் நல்ல அம்மையே, சொல்லு, சொல்லு! உனது கதையை அதற்குரிய ஆவலோடும் கேட்டு வருகின்றோம்.” என்று மீனாம்பாள் வியப்புடன் கூறினாள்.

குமுதவல்லியும் தன் பார்வையினால் மனக்கிளர்ச்சி உண்டு பண்ணினாள்; அதனால் அவ்வறிவோளும் அக்கதையைத் தொடர்ந்து சொல்வாளானாள்.

66

கண்கட்டப்பட்டிருந்தாலும் இன்னும் என் குதிரைமேலே தான் நான் இருந்தேன். அந்தப் பெரியவர் என் பக்கத்தில் சவாரி செய்துகொண்டு, நான் ஏறியிருந்த குதிரையின் கடிவாளத் தைத்தாம் பிடித்துக் கொள்ளத்தக்க வகையாக அமைத்து அதனை நடத்திவந்தார். சிலநேரம் நாங்கள் கடுவிரைவாய்ச் சென்றோம். சிலநேரம் ஏற்றமான இடங்களில் ஏறிச்செல்லும்போதும், குதிரையின் நடை வேறுபாட்டால்

அதனால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/196&oldid=1581469" இலிருந்து மீள்விக்கப்பட்டது