உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168

மறைமலையம் 13

அருமையுங் கரடுமுரடு முள்ளனவாக யான் தெரிந்துகொண்ட நீளங்களைத் தாண்டிச் செல்லும் போதும் மிகவும் மெதுவாகச் சென்றமையால் அங்காந்த மலைப்பிளவுகளைப் பற்றியும் திடுக்கிடும்படியான செங்குத்து மலைகளின் விளிம்பிற் சுற்றிச் செல்லும் வழிகளைப்பற்றியும் நினைத்துக் கலங்கினேன். இந்த வகையாக மங்கல் மாலைப்பொழுது வந்து சூழும் வரையில் வழிச் சென்று கொண்டிருந்தோம்; அதன் பிறகு மறுபடியும் ஓரிடத்திற் றங்கினோம்.என் கண்ணினின்றும் கட்டு அவிழ்த்துவிடப்பட்டது; மேற்கணவாய் மலைப்பக்கத்தில் மிகக் கடுமையானதும் அச்சுறுத்துவதுமான ஓரிடத்தில் நான் இப்போது வந்திருந்தேன் என்பதனை எனக்குக் காட்டுவதற்கு இன்னும் போதுமான வெளிச்சம் இருந்தது. நங்கைமீர், அங்காந்த

மலைப்

பிளப்புகளையும், உயர்ந்தோங்கிய மலை களையும், வழுக்கி நகரும் பனிப் பாறைகளையும், இடியென முழங்கும் பெரிய மலையாற்றின் வீழ்ச்சிகளையும், நடுக்கந்தரும் கணவாய்களையும், உறைபனிமூடின மிக உயர்ந்த இடங் களையும் நீங்களே நினைத்துப் பாருங்கள்; அப்போதுதான் என்னைச்சூழ இருந்த நிலத்தோற்றங்களின் மேன்மையும் திகிலும் உட்கும் வாய்ந்த வடிவங்களைப்பற்றி நீங்கள் ஏதோ சிறிது புல்லிய நினைவு கொள்ளக்கூடும். மற்றொரு பெருங்குகை எமக்குத் தங்கும் இடமாயிற்று; திரும்பவுந் உ உணவுப் பொருள்களும் பானீயங்களும் கொண்டுவந்து வைக்கப்பட்டன- மற்றும் ஒரு முறை யான் தீக்காய்ந்து மகிழ்ச்சியோடும் இளைப்பாறி யிருந்தேன்.” என்று திகழ்கலை மொழிந்தாள்.

தீமூட்டப்பட்டது-

"இனி இப்போது தான் உனது கதையில் தெரிந்து கொள் வதற்கு மிகுந்த ஆவலை எழுப்பும் பகுதி வரப்போகிறதென்று நினைக்கின்றேன்.” என்று மீனாம்பாள் தன்னகத்தெழுந்த ஆவலையும் அயிர்ப்பையும் வருத்தத்தோடு மறைத்துக் கொண்டு கூறினாள்.

66

‘கடவுள் அறிய அஃது அப்படித்தான் உள்ளது! கடுங் குளிர் நிறைந்ததும், கரடுமுரடான தன்றன்மையால் உள்ளத்திற் பதியத் தக்கதுமான இயற்கை யமைப்பு வாய்ந்த அவ்வச்சம்மிக்க இடத்தில் நாங்கள் வந்து சேர்ந்த போது, நான் முன் சொல்லிய படி மாலைக் காலமாகத்தான் இருந்தது. ஏறக்குறைய ஐந்து நாழிகை நேரம் பெரும்பாலும் முழுதும் இருள் வந்து சூழும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/197&oldid=1581470" இலிருந்து மீள்விக்கப்பட்டது