உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமுதவல்லி நாகநாட்டரசி

169

வரையில் நாங்கள் அங்கே தங்கியிருந்தோம்; அவ்விருளின் இடையிலே அடுத்துள்ள மலைக்குவடுகளிலுள்ள உறை பனியின் துலக்கம் மாத்திரம் சிறிது தெரிந்தது. அப்பொழுது அப் பெரியவர் என்னை எழுந்து தன்னுடையனே வருவதற்கு ஆயத்த மாம்படி கட்டளையிட்டார். இப்போது மறுபடியும் என் கண்ணைக் கட்டிவிட்டார்: ஆனால், இந்த முறை நாங்கள் எங்கள் குதிரைகளின் மேல் ஏறவில்லை;--அவைகள் அக் குகையிலே பத்திரமாக நிறுத்தப்பட்டன. நாங்கள் கால் நடையாகவே செல்லவேண்டுவதாயிற்று. அந்தப் பெரியவர் என்னைக் கையைப் பிடித்து அழைத்து கொண்டு சென்றார்; இவ்வாறு ஒரு நாழிகை நேரம் நடந்து சென்றோம்; உறை பனியால் ஆன அம்புகள் என் மூளையை ஊடுருவிப் பாய்வது போலக் குளிர் அவ்வளவு முறுகித் தோன்றியது.கடைசியாகச் சில நொடிநேரம் ஓரிடத்தில் வந்து நின்றோம். பின்னர் அப்பெரியவர் என்னை முன்னுக்கு நடத்தினார்--மிகவுங் கொடிய குளிரின் வருத்தம் சிறிது நீங்க உண்டான வெது வெதுப்பி னாலும், எங்கள் கால்களில் உண்டான மழுங்கிய எதிர் ஒலியி னாலும் ஏதோ ஒரு குகை யினுள் நுழைந்தோம் என்பாதை நான் சொல்லக்கூடும். அது நீண்டதாயிருந்தது; அது முடிவு பெற்றவுடனே, அப் பெரியவர் என்னை நோக்கி, "இப்போது நீ படிக்கட்டுகளின் வழியே இநங்க வேண்டியிருக்கின்றது. அதுவும் ஆழத்தில் இறங்க வேண்டும்; என்றாலும் என் கையைப் பிடித்துக் கொள், அஞ்சாதே' என்று சொன்னார். ஒரு கதவு மெல்லெனத் திறப்பது போல் ஓர் ஓசை எனக்குக் கேட்டதென்று நினைத்தேன்; ஆனாலும் அஃது எனக்கு உறுதிப்படவில்லை. இறங்கத் துவங்கினோம்; உடனே எங்கள் காலடிகள் புதுமை யான எதிரொலியை எழுப்பினமையினாலே, மூடிக் கொள்ளும் கதவினொலி ஏதேனும் இருந்தாலும் அஃது என் செவியிற் படவில்லை. வரவரக் கீழ் இறங்கிச் சென்றோம். உரமான மலைப்பாதையில் வெட்டப்பட்டுத் திருகிச் செல்லும் படிக்கட்டாக அது காணப்பட்டது. இன்னுங்கீழே, இன்னும் நெடுந்தூரம் கீழே கீழே இறங்கிப் போனோம்; வளைந்து வளைந்து சென்றமையால் என் தலை கிறுகிறு வென்று சுற்றத் தொடங்கிற்று, இறங்கும் வருத்தத்தால் என் கால்கள் நோவுற்றன, ஆயினும்; ஆழத்திற் செல்லச் செல்ல வாயுமண்டலம் வெப்ப முள்ளதாவதை உற்றறிந்தேன்; புதுமையும் அச்சமும் நிறைந்த எண்ணங்கள் படிப்படியே என் உள்ளத்திற் றோன்றலாயின. தீது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/198&oldid=1581471" இலிருந்து மீள்விக்கப்பட்டது