உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170

மறைமலையம் 13

செய்யும் பொல்லாத கூளிப் பேய் தான் மக்களுருவில் வந்து, என்னைத் தேடிப் பொருட்கள் தருவதாக ஏய்த்து, இப்போது என்னைத் தான் இருக்குங் கொடிய பாதாள உலகத்திற்குக் கொண்டு போவதாய் இருக்கலாமோ!" என்று திகழ்கலை கூறுகையில்,

இடையே குமுதவல்லி இதனைக் கேட்டவுடன் தன் மெல்லிய உடம்பு நடுங்கப் பெற்றவளாய், “ஆ! இந்நினைவுகள் உண்மையிலே வெருவத்தக்கனவாய்த் தாம் இருக்க வேண்டும்!” என இயம்பினாள்.

66

மீனாம்பாள் ஒவ்வொரு நொடியும் தன் உள்ளத்தெழுந்த ஐயம் முதிர்ந்தமையால் அதனைத் தாங்கப் பெறாதவளாய்க் கதையைச் சொல்லு, சொல்லு!" என்று விளம்பினாள்; அவ்வறிவோள் தன் கதையைச் சொல்லிக் கொண்டு வந்த மாதிரி போதுமான வரையில் சுருக்கமுள்ளதாக இருந்தாலும், அக் கொள்ளைக்காரன் மனைவிக்கு அது மிகுதியும் மெதுவுள்ள

தாகவே காணப்பட்டது.

66

மறுபடியும் திகழ்கலை, என்னுடை ய எண்ணங்கள் இங்ஙனம் என்னைக் கவர்ந்து கொள்ளப் புகுந்த சமயத்தில், சடுதியிலே நாங்கள் நின்றோம்--வெளியிலே ஒரு கதவு திறந்தது; உடனே நறுவிய வாயு மண்டலத்தின் இருப்பு எனக்குப் புலனா யிற்று. மழை காலத்தின் குளிர் மிகுந்த நீண்ட இராப் பொழுதின் நள்யாமமாயிருந்தும் அப்போது அங்கு வீசிய காற்று மெல்லி தாயும், வெதுவெதுப்பாயும், நறுமணங் கமழ்வதாயும் இருந்தமை யால், என்னுடைய திகிலெல்லாம் ஒரு நொடிப்பொழுதிற் பறந்து போயின; என்னுள்ளத்தில் இனியதொரு கழி பெருங்களிப்பு எழுவது உணர்ந்தேன். என்னை அழைத்துப் போம் அப்பெரியவர் திரும்பவும் என்னைக் கைபிடித்து முன்னே அழைத்துச் சென்றார். அங்குள்ள கருங்கற் பாறை யினாற் செய்யப்பட்டது போன்ற கதவு பேரோசையோடும் எனக்குப் பின்னே சாத்திக் கொள்ளக் கேட்டேன். சிலவேளை மென்புல் வளர்ந்த பற்றை போலவும், மற்றுஞ் சிலவேளை நன்கு மிதிபட்ட பாதை போலவுந் தோற்றப்பட்ட இடத்தில் இறங்கிக் கொண்டே போயினோம். உறைபனியும் மலைகளும் நிறைந்த அப்பக்கத்தில் என்னைச் செவிடு படுத்தின நீரோட்டங்களின் பேரிரைச்சல் போலாது, அதனோடு மாறுபட்டு னியவாய்த் தோன்றின

மலை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/199&oldid=1581472" இலிருந்து மீள்விக்கப்பட்டது