உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீழாறுகளின்

குமுதவல்லி நாகநாட்டரசி

171

அமைதியான முறுமுறுப் பொலிவும், சிலுசிலுவென்று ஓடும் அருவிகளின் ஓசையும் என்காதிற் பட்டன. நடந்து செல்வது உழைப்பாகக் காணப்படாத மெல்லெனச் சரிந்த இடங்களில் இறங்கிக் கொண்டும், ஆறுதலும் மென்மையும் நறுமணமும் மிக்க தென்றற் காற்றினிடையே ஒவ்வொரு நொடியும் நுழைந்து கொண்டும் மேலும் மேலும் போயினோம். என் ஆடைகள் செடிகளின் மேற்பட்டுச் சரசரவென்று ஓசை செய்தன: என் காலடிகள் சிலநேரம் மலர்களினிடையே அகப்பட்டுக் கொண்டன: பிடிக்கப்படாத எனது மற்றைக்கை கிளை களிலிருந்து தொங்கும் பழங்களின் மேல் தட்டுப்பட்டன. யான் நுழைந்த அவ்விடம் இளவேனிற் காலமுடையதாய்த் தோன்றியது! கடைசியாக என்னை அழைத்துச் சென்றவர் திடுமென நின்று என் கண்களினின்றுங் கட்டவிழ்த்து விட்டார். என்று சொல்லவே,

உடனே மீனாம்பாள், "நீ என்ன நீ என்ன கண்டாய்? என்ன கண்டாய்? விரைந்து சொல்!" என்று வினவினவள். அப்புறம் நம்பிக்கையால் எழுந்த மிகுகளிப்பினிடையே தன்னைத் தானே தடுத்துக்கொண்டு, முன்னிலும் அமைதியாய், "நல்ல திகழ்கலை, உனது கதை வலுத்த ஆவலைக் கிளப்ப வல்லதாய் இருக்கின்றது. என மொழிந்தாள்.

"மேற்கணவாய் மலைகளின் நடுவே மறைபட்டிருக்கும் இன்ப உறையுளைப் பற்றிய ஊரார் சொற்களை நான் கேட்டிருக்கிறேன்: ஆனால், கட்டுக்கதை குடி கொண்ட அந்நாடுகளில் நடைபெறும் பொய்க் கதையாகவே இவற்றை நான் இதுவரையில் நினைந்து வந்தேன்." என்று குமுதவல்லி கூறினாள்.

66

ங்கே கட்டுக்கதை இல்லை; நான் உண்மையே சொல்லி வருகிறேனென்று கடவுளுக்கு ஒப்பாக ஆணையிட்டுக் கூறு கிறேன்.” என்று திகழ்கலை பகர்ந்து, பின்னும் மீனாம்பாள் பக்கமாகத் திரும்பி, "பெருமாட்டி, நான் என்ன கண்டேன் என்று கேட்டீர்களே, அதனைச் சொல்லுகின்றேன் கேளுங்கள், வெண்மதி துலக்கமாக விளங்கிற்று. மக்கள் கண்ணிற்கு என்றுந் தென்பட்டிராத மிக அழகிய அவ்விடத்தின் மேல் அதன் ஒளிபட்டுத் துலங்கியது. அவ்விடம் மிக அழகியதாய் மாத்திரம் இருக்கவில்லை, மற்றொரு வகையில் மிக்க வியப்புடைத்தாயும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/200&oldid=1581473" இலிருந்து மீள்விக்கப்பட்டது