உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172

மறைமலையம்

13

மூடிய

சாலவும் விழுமியதாயும் இருந்தது! பலதிற விநோத வடிவங் களாக விளிம்பு உடைந்த பெரிய ஒரு சீனத்துப் பீங்கானை நினைத்துப் பாருங்கள்; அதன்பிறகு, அப்பீங்கான் அடியிற் கிடந்த சில சிறிய பூச்சிகள் மேல் நிமிர்ந்து அவ்விளிம்பைச் சுற்றி நோக்கினால் அவற்றிற்கு எவ்வகையான தோற்றமுண்டாகு மென்பதை நினைத்துப் பாருங்கள். புதுமையாகக் காணப்படும் இவ் எனது உருவகத்தைப் பொருந்திப் பார்க்குமிடத்து, அப் பெரியவர் என்னை அழைத்துக் கொண்டு போய் விட்ட அப்பள்ளத் தாக்கினடியில் யான் அப்பூச்சையைப் போல் இருந்து காண்டு சுற்றிலும் மிகப் பெரிய மலைகளின் வட்டவேலியை மேல் நிமிர்ந்து நோக்கினேன். அங்குள்ள ஒவ்வொரு பொருளையும் நிரம்பவுந் தெளிவாக யான் பிரித்தறியத் தக்கபடி, வெண்டிங்கள் அத்துணை விளக்கத் தோடும் திகழ்ந்தது; வட்ட மாயுள்ள மலைக்குவடுகளின் மேல் பனிக்கட்டிகளின் எதிரொளி யால் அந்நிலவின் பளபளப்பு அப்பள்ளத்தாக்கிலே ஒருங்கு சேர்க்கப்பட்டு அத்துணை விளக்கத்தோடும் இலங்கியது. இப்பள்ளத் தாக்கினின்றும் அப்பால் ஏறிப் போகவாவது, அல்லது அப்பாலுள்ள காட்டிடங்களிலிருந்து ஏறி இதனுள் வரவாவது முயலும் எவரும் அங்ஙனங்கடந்து செல்வதற்கு ஏலாத வண்ணம் பிதுங்கி நீண்ட செங்குத்தான பெரும் பாறைத் தொகுதிகளோடு அவ்வோங்கிய பொருப்பிடங்களெல்லாம் அப்பள்ளத்தாக்கின் பக்கங்களில் நேர் நீண்டிருந்ததாகிய ஈதொன்றிலே தான் இம்மலையவேலி நான் சொன்ன ஒழுங்கின்றி விநோதமாக உடைந்த விளிம்பினை உடைய பீங்கான் உவமையினின்றும் வேறுபடுகின்றது. ஓ! இம்மலைய வேலிக்குப் புறத்தேயுள்ள நாடுகளிலெல்லாம் மிகக் கொடிய குளிர் மிகுந்த மழைக்காலமாயிருக்க, இப்படுகரின் ஆழ்ந்த இடத்திலோ இனியவேனிற் காலமாயிருந்தது! தித்திக்கும் பழக்குலைகளைச் சுமந்த முந்திரிக் கொடிகளையும் மணிகள் பதித்தாற் போலப் பன்னிற மலர்கள் நிறைந்த நிலத்தையும், என்னைச் சூழ எண்ணிறந்த நிலத்தாமரைப் (Rose Flower) பூக்கள் மலர் தலையும் யான் வேறுவேறு பகுத்தறியக் கூடியதாயிருந்தது. என்று திகழ்கலை சொல்லி வருகையில்;

L

ன்ப

""

"நிலத் தாமரைகளா? ஆம்!" என்று மீனாம்பாள் களிப்பினால் மெய்ம்மறந்து கூறினாள்; தான் கேள்வியுற்ற நிலத்தைப் பற்றிய எண்ணங்களே தன்னுள்ளத்தில் நிரம்பி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/201&oldid=1581474" இலிருந்து மீள்விக்கப்பட்டது