உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமுதவல்லி நாகநாட்டரசி

173

நின்றமையால், அவள் அம்மலையவேலி என்னுந் துறக்க நிலத்தைப் பெறுதற்கு மிகுதியும் விரும்பினாள்.

குமுதவல்லி களங்கமற்ற தன்மையுடையவளாதலால்,

திகழ்கலை படுபொய்களைக் கட்டிச் சொன்னாள் என்று நம்பக் கூடாதவளாயிருந்தாலும், அவ்வளவு புதுமையானதும் நம்பிக்கை யற்றதுமான ஒரு வரலாற்றினை உண்மையென்று ஒப்புக் கொள்வதற்கும் தான் கூடாதவளாய், “இவைகள் எல்லாம் உண்மையிலே வியப்பாகவே இருக்கின்றன!” என்று கூறினாள்.

66

ஆண்டவன் அறிய இவைகள் எல்லாம் மெய்யே என்று ஆணையிட்டுச் சொல்லுகின்றேன்! என்னுடைய கதையை முற்றுஞ் சொல்லி விடுகின்றேன். முழுமதி விரித்த தெள்ளிய வெண்ணிலவொளியின் உதவி கொண்டு அத்தூய நிலத்தை யான் இன்பமோடு வியந்து நோக்குதலை என்னை அழைத்துச் சென்ற அப்பெரியவர் சிறிது நேரம் பார்த்து மகிழ்ந்தார் போற் காணப்பட்டது; பிறகு அவர் அருள் கூர்ந்த புன்சிரிப்புடன் என்னைத் தன் பின்னே வரும்படி கட்டளையிட்டபோது அவர் சொன்னதாவது: 'மறுபடியும் இங்கிருந்த வெளியேயுள்ள பெரிய உலகத்திற்கு நீ போன பின்பு, இவ்விரகசியத்தை வெளியிட லாகாதென்று நான் சொல்ல வேண்டுவதில்லை; ஏனென்றால், இத்தகைய நீ வெளியிட்டாலும் எவரும் உன்னை நம்பவே மாட்டார்!” என்று திகழ்கலை திரும்பவும் உரைத்தாள்.

மீனாம்பாள் பெருங்களிப்பினால் ஓசையின்றி நீண்ட பெருமூச்செறிந்து, “ஓ! எங்ஙனமாயினும் நான் நீ சொல்லுவதை நம்புகின்றேன்!” என்று தனக்குட் சொல்லிக் கொண்டாள்.

திகழ்கலை திரும்பவுந் தன் கதையைச் சொல்லத் தொடங்கினாள்; “அப்பெரியவர் பூக்களும் பழம் நிறைந்த மரங்களும் பழக்குலை சுமந்த கொடிகளும் என்னும் அவற்றினி டையிலே என்னை வழி நடத்திக் கொண்டே சென்றார்; எனக்கு விருப்பமான கனி எவையேனும் அவற்றைப் பறித்துண்ணும்படி கட்டளையிட்டார். யான் அங்ஙனமே செய்தேன்; நங்கைமீர், அவ்வினிய படுகரிலே அன்று நான் விருந்துண்ட தீங்கனிகளைப் போல் அவ்வளவு சுவையான கனிகளை சுவைத்துப் பார்த்ததே யில்லை. அப்படுகரின் நடுவிலேயுள்ள புல் நிலத்தின் மேல் அமைக்கப்பட்டிருந்த ஒரு சிறிய மாளிகைக்கு அப் பெரியவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/202&oldid=1581475" இலிருந்து மீள்விக்கப்பட்டது