உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174

மறைமலையம் - 13

என்னை அழைத்துச் சென்றார். நிலவு வெளிச்சத்தில் வெண் சுண்ணவொளி போல் வயங்கும் புதுமையான ஒருவகைக் கற்களால் கட்டப்பட்டு இருந்தமையால் அஃது ஒரு மலைக்குகை போற்றோன்றியது. ஒரு சிற்றாறு அதன் அருகே சிலுசிலுவென்று ஓடியது; புல் நிலத்தைச் சூழ இருந்த பாங்கெல்லாம் நிலத்தாமரையின் தோட்டங்களைத் தவிர வேறில்லை. ஓ அம்மலர்களின் நறுமணத்தோடு அளாவி வீசும் தென்றற்காற்று எவ்வளவு இனிதாயிருந்தது! அது நோய்ப்படுத்துவதாகவேனும் கடுமையுள்ளதாகவேனும் தோன்றவில்லை. யான் அந்த உல்லாச மண்டபத்தினுட் கொண்டு போய் விடப்பட்டேன். அங்கே யான் பார்க்க வேண்டிய நோயாளியைக் கண்டேன். அவரும் ஆண்டின் முதிர்ந்த பெரியவராகவே இருந்தார்--ஆனால் இக்கதையின் இந்தப் பாகத்தைப் பற்றி யான் சொல்ல வேண்டுவதில்லை. ஒரு வாரம் முழுதும் அவ்வினிய பள்ளத் தாக்கின் கண் யான் தங்கி இருந்து அதன் ஒவ்வொரு பாகத் திலும் உலாவித் திரிந்தே னென்றும், என்னை அங்கே அழைத்துச் சென்ற பெரியவரையும், யான் மருந்து கொடுத்த மற்றொரு பெரியவரையுந் தவிர வேறு எவரையும் யான் அங்கே பார்த்திலேன் என்றும் சொல்வது மாத்திரம் போதும். யானும் அவர்க்கு நோய் தீர்த்தேன்!”

66 ஓ, இவ்வழகிய பள்ளத்தாக்கைப் பற்றி இன்னும் மிகுதியாகச் சொல்! கனிகளையும் பூக்களையும் அமைதியான சிற்றாறுகளையும் விரைவான மலைவீழாறுகளையுந் தவிர வேறு எதனையும் நீ பார்க்க வில்லையா?” என்று மீனாம்பாள் வியப்புடன் வினாவினாள்.

அதற்குத் திகழ்கலை, “நங்காய், ஆம், மாந்தர்கண்கள் என்றுங் கண்டிராத நிரம்பவும் அழகான பறவைகளைப் பார்த்தேன்; மக்கள் செவிப்புலனில் என்றும்பட்டிராதமிக இனிய சைகளையுங் கேட்டேன். வேலியாகச் சூழ்ந்துள்ள அம்மலைகளின் அடிப்படைகளும் நெடுந்தூரங் கீழே ஊடுருவிச் செல்வனபோற் காணப்பட்ட பெருமுழைஞ்சுகளின் நுழை வாயில்களையும் அவ்வாறே கண்டேன்: ஆனால், அவற்றுள் நெடுக நுழைந்து செல்வதற்கு எனக்குத் துணிவில்லாமற் போய்விட்டது. என்றாலும், நான் அப்படுகரில் தங்கியிருந்த ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/203&oldid=1581476" இலிருந்து மீள்விக்கப்பட்டது