உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமுதவல்லி நாகநாட்டரசி

175

கிழமை முழுதும் என்னைக் கலங்கச் செய்யும் அல்லது அச்சுறுத்தும் அல்லது அத்துறக்க நிலத்தில் யான் திளைத்த இன்பத்தினைப் பழுதுபடுத்தும் எந்த உயிரையும் யான் சிறிதேனும் காணவில்லை. அவ்விடத்தில் நரிகளின் ஊளைக்குரல் கேட்கப் படுவதில்லை--நிலத்தாமரைத் தூறுகளின் நடுவிலும் கொடி முந்திரித் தொகுதிகளினி டையிலும் ஓநாய்கள் ஒளிந்திருப்பதில்லை--புற்களினூடே பாம்புகள் களவாய் ஊர்ந்துவருவதில்லை--கழுகுகளுங்கூடத் தாம் ஓங்கிப் பறக்கும் உயரத்திலிருந்து இப்பள்ளத்தாக்கைப் பார்க்கு மட்டில் மன அமைதி பெறுவதல்லாமல், இதனுள் இறாஞ்சிப் போவதில்லை! நங்கைமீர், இன்னும் இதனை விரித்துச் சொல்லப் புகுவே னானால், அப்படுகரின் வளங் களையும் வனப்புகளையும் புனைந்துரைப்பதில் பல நாழிகை நேரங்கள் யான் கழித்து விடக்கூடும்; ஆனால் இக்கதையை நான் ஒரு முடிவுக்கு கொண்டுவரவேண்டும். அக்கிழமை முடிவில், யான் பார்த்து வந்த நோயாளி முற்றிலும் நோய் தீரப் பெற்றார்; என்னை அவ்விடத்திற்கு அழைத்துக் கொண்டு போன பெரியவர், ஓர் இராப் பொழுதின் நடுவில் நாம் புறப்பட வேண்டுமென்றறி வித்தார். யான் நோய் தீர்த்தவரிடத்தில் விடை பெற்றுக் கொண்டேன்: ஆனால், சொல்லற்கரிய துயரத்தோடும் யான் அப்படுகரைவிட்டுவர ஆயத்தமானேன். அப்பெரியவர் மெல்ல மெல்லச் சரிவாய் உயரம் அவ்விடத்திற்கு என்னை நடத்திக் கொண்டு சென்றார்; அதன்பிறகு என் கண்கள் கட்டப்பட்ட மையால், எனது மிச்சக்காலத்தையும் யான் மகிழ்வோடு கழித்து விடத்தக்க அத்துறக்க நிலத்தின் காட்சி மறைபட்டுப் போயிற்று. இல்லை இனி ஒரு போதுமில்லை!” என்று உறுத்திச் சொல்லிப் பின்னும் “அங்ஙனம் யான் சிலகாலம் போயிருக்கும் படி நேர்ந்த அவ்விடம் இந்திரலோகமாகத் தான் இருக்க வேண்டும்; மேலும் நான் உண்மை நம்பிக்கையுடைய வளாதலால் பின்னும் ஒரு கால் அவ்விடத்திற்குச் செல்வே னென்று விழைந்திருக்கின்றேன். பெருமாட்டிகளே, யான் உங்களுக்குச் சொல்லிக் கொண்டு வந்தபடி, மறுபடியும் நான் கண் கட்டப் பட்டேன்--இறக்கமான இடங்களை ஏறிச் சென்றோம்--பிறகு முன்முறை சொல்லிய கதவண்டை வந்து சேர்ந்தோம்; புறத்தேயுள்ள உலகத்திற்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/204&oldid=1581477" இலிருந்து மீள்விக்கப்பட்டது