உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

177

அதிகாரம் - 11 கரும்பாம்பு

குமுதவல்லியும் திகழ்கலையுந் திகிலினாற் குதித்தெழுந் தார்கள்; தோழிப் பெண்களும் உடனே அவ்விடத்திற்கு ஓடிவந்தார்கள். நிரம்பவுங் கோரமான பெருந்திகில் தோன்றப்பெற்ற முகத்தோடு அக்கொள்ளைத் தலைவன் மனைவி தன் ஆடைபின் ஓரத்தை மேலே தூக்கி இழுத்தாள்; அங்கே மிகவும் நேர்த்தியாக உருவாக்கப்பட்ட அவள் கணைக்காலைச் சுற்றி ஒரு கரும்பாம்பு தன்னுடம்பை வளைத்துக்கொண்டிருந்தது. ஓ! முதலிலிருந்தே அரவமின்றித் திருட்டுத் தனமாய்ப் புற்களினூடே நுழைந்து வந்து, தன் நச்சுப் பற்களைச் சிறப்பு மிகுந்த மீனாம்பாள் சதையிலோ அல்லது அழகிய குமுதவல்லி சதையிலோ பதிப்பதென்னும் ஐயுறவினால் இடையிடையே நெடுநேரம் தங்கித் தங்கி வந்த பாம்பு அதுதான். தான் விழித்திருக்கும் போதுங் கனாக்காண்பது போற் பாவித்து வந்த மனோபாவனையால் முன்னே தான் சிறிதுணர்ந்த இந் நிலவுகத்துறக்கத்தைப் பற்றி அக்கொள்ளைத் தலைவன் மனைவி இப்போது கேட்டு வருஞ் சமயத்தில்--தன் நெஞ்ச மானது களிப்பு நிரம்பின நம்பிக்கையால் நிறைக்கப்பட்டிருப்பப் பரவசமான தன் எண்ணங்கள் உறைபனி மூடிய மேற்கணவாய் மலைவரம்பு களைத் தாண்டி, என்றும் இளவேனில் குடி கொண்டிருப்பதும், பரிமளமான தன் தனியிடங்களில் மழை காலத்தின் ஊதைக் காற்று நுழையப் பெறாததுமான அப்படு

கரிற் செல்லுகின்ற அச்சமயத்தில் சாவைத்தரும் அக்கொடும் பாம்பு அவளது வெதுவெதுப்பான மெல்லிய தசையிலே தன் கூர்ப் பற்களை ஊன்றியது!

அறிவிற் சிறந்த திகழ்கலையைத் தவிர மற்றவர்கள் எல்லாரும் மனக்கலக்கத்தினாலும் துன்பத்தினாலும் ஏக்கத்தி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/206&oldid=1581479" இலிருந்து மீள்விக்கப்பட்டது