உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178

மறைமலையம்

13

னாலும் அலங்கோலமாயினர். இந்தப் பெண்பிள்ளை மாத்திரம் ஊக்கந் தளரவிடாமலிருந்தாள்; ஒரு மரத்தின் ஒடிந்த கிளை ஒன்றைப் பிடுங்கிப் புல்லின் மேல் நீண்டு கிடந்த அப்பாம்பின் வாலின் மேல் ஓரடி கொடுத்தாள்; உடனே அஃது இரைந்து கொண்டு தன் சுற்றை அவிழ்த்தது; மறுபடியும் அவ்வளாரின் அடி அதன் மேல் விழுந்தது; உடனே அது சாவு நோய் மிகுந்து நெளிந்து கிடந்தது. சுருண்டு துடிக்கும் பாம்பின் கிட்ட இருக்கவிடாமல் இப்போது அரைவாசி களைத்து விழும் மீனாம்பாளைக் கரையின் சிறிது மேற்புறத்தே விரைந்து இழுத்து வரும்படி திகழ்கலை தோழிப் பெண்களுக்குக் கற்பித்தாள். ஒரு நொடிப்பொழுதுங் சோரவிடாமல் திகழ்கலை மிகவும் பெருமை பாராட்டிப் பேசிய தன் மருந்துகளைக் குனிந்து கொண்டே காயத்திற் சேர்த்தினாள். அதன் பின்னர் எவ்வகை யான நஞ்சுக்கும் முறி மருந்துகளென்று தான் முன்னமே சொல்லிய வற்றுள் ஒன்றான ஒரு சூரணத்தை எடுத்துத், தான் ஏவியபடி தோழிப்பெண் ஒருத்தி கொண்டுவந்த ஒரு கிண்ணந் தண்ணீர் சிறிதில் அதனைக் கலக்கி அதனை அவள் மீனாம்பாள் வாயில் ஊற்றினாள்.

மிகக் கொடிய நச்சுப்பாம்பின் கடியையும் மாற்றும் உயர்ந்த மருந்தாகத் தான் நம்பிய ஒரு மூலிகை தங்கள் கூடாரம் அடிக்கப்பட்ட இடத்திற்கு அருகாமையில் வளர்ந்திருப்பதைத் தான் சிறிது நேரத்திற்குமுன் காண நேர்ந்தமையால் அதனைத் தேடிக்கொண்டு காப்பிரிப் பெண்ணானவள் பழமரங்கள் நிறைந்த தோப்பினுள் விரைந்து சென்றாள். அந்தச் சிற்றாற்றின் கரைமேற் றோன்றிய இந்தக் காட்சியானது மனத்தை உருகச் செய்வதாய் இருந்தது. ஞானாம்பாள் மீனாம்பாளைத் தன் கைகளிற் றாங்கிக்கொண் டிருந்தனள். சுந்தராம்பாள் அவள் கைகளில் ஒன்றைப் பிடித்துக்கொண்டு அவள் முகத்தைக் கவலையோடும் உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தாள்; மீனாம் பாளின் பாங்கியான மலையநாட்டுப்பெண்ணோ பெரும் திகிலோடும் பேரச்சத்தோடும் நோக்கிக் கொண்டிருந்தாள் - திகழ்கலையோ உயர்த்துபேசிய தனது மருந்தைச் செலுத்தி யிருந்தும் ஒருவகையான பெரிய முகவாட்டத்தோடும் அருகே நின்று கொண்டிருந்தாள். குமுதவல்லியோ தன் கன்னங்களிற் கண்ணீர் ஒழுகப்புற்பற்றை மேல் மண்டியிட்டு முழங் காலின்மேற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/207&oldid=1581480" இலிருந்து மீள்விக்கப்பட்டது