உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமுதவல்லி நாகநாட்டரசி *

-

179

குனிந்தபடியே நின்றாள்; ஏனென்றால், தான் ஏற்கனவே விரும்பத் தலைப்பட்டவளும் இறக்கக்கூடாத அத்தனை இளம்பருவ முள்ளவளும் - பெண் அழகிற்கு அவ்வளவு சிறந்த மாதிரியா யிருந்தவளும் ஆன ஒரு பெண்மணி இந்நிலவுலகத் துள்ள ஒளியை என்றுங் காணாதபடி தன் கண்களை மூடிக்கொள்ளப் போவதை எண்ண எண்ண அவள் நிரம்பவுங் கடுமையாகத் துன்புறுத்தப்பட்டாள்!

நாம் முன்னமே சொல்லியபடி மீனாம்பாளை ஒருகளைப்பு வந்து மூடியாது; அஃது, அவளுடைய நரம்புக்குழாய்களில் அப்பாம்பின் நச்சுநீர் ஓடுவதனால் உண்டான விறைப்பின் விளைவு என்றும், அது சாவை உண்டாக்கும் திமிர்ப்பாக விரைவில் முடியும் என்றும் குமுதவல்லி எண்ணினாள். கலக்கமும் துன்பமும் உற்ற குமுதவல்லி தான் மண்டியிட்டிருந்த நிலை யினின்றும் குதித்தெழுந்து உருக்கம் நிறைந்த குரலோடு திகழ்கலையை நோக்கி, “இந்த அம்மையை நீ காப்பாற்றக் நீ கூடுமென்று நினைக்கிறாயா? உன்னுடைய மருந்துகளில் உனக்கு நம்பிக்கை இருக்கிறதா? எனக்குச் சொல். புண்ணியத்தின் பொருட்டாக வேனும் உன்னால் ஆனமட்டும் பார் நானே உனக்கு நிரம்பவுங் தாராளமாகப் பரிசுகொடுப்பேன்!" என்று பேசினாள்.

அதற்குத் திகழ்கலை “மனிதனுடைய கை மருந்துகள் கொடுக்கும், ஆனால், மற்றவற்றை ஆண்டவனே முடிவு செய்யவேண்டும். உங்களுடைய தோழி பிழைத்தாலும் பிழைக்கலாம், அல்லது செத்தாலும் சாகலாம்: அதனைக் கடவுளே அறிவார்! கடவுளே பெரியவர்!” என்று கூறி, இந்த வகையான பேச்சினால் வைத்தியஞ் செய்யுந் தன் உண்மைக் குணத்தையும், சிறிது நேரத்திற்கு முன் தவறாமற் பலிக்குமென்று தான் பெருமை பாராட்டிக் கூறிய தன் மருந்துகளின் மதிப்பையும் பாதுகாக்கப் பார்த்தாள்.

அதனைக்கேட்ட குமுதவல்லி வருத்தமும் மனத் தளர்ச்சியும் அடைந்து "ஐயோ கடவுளே! உன் சொற்கள் எனக்கு நம்பிக்கையைத் தரவில்லையே!" என்று முறுமுறுத்தாள்.

நாகநாட்டரசிக்கும் அவ்வறிவோளுக்கும் இடையே நடந்த இச்சொற்களைக் கேட்கும்படியான அளவுக்கு உணர்வுவரப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/208&oldid=1581481" இலிருந்து மீள்விக்கப்பட்டது