உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180

மறைமலையம் - 13

பெற்ற மீனாம்பாள் தன் கரியபெரியவிழிகளைத் திறந்து, “ஏது, நம்பிக்கை சிறிதும் இல்லை! அந்தச் சாநஞ்சு என் நரம்புகளிற் சுற்றி ஓடுகிறது; நான் சாகவேண்டுவது தான்! ஆனால், ஓ பெருமாட்டி! நீங்கள் என்னிடத்தில் பற்றுவைத்தீர்களே, அழகிய குமுதவல்லி நீங்கள் என்பொருட்டுத் துயரமும் அடைகிறீர் களே!” என்று கூறினாள்.

மறுபடியும் மீனாம்பாள் பக்கத்தில் மண்டியிட்டுக் குனிர்ந்த நாகநாட்டரசி தன்னை அவள் பெயர் சொல்லி அழைத்ததைக் கேட்டு அவள் மேல் வியப்புடன் நோக்கினாள்; ஏனெனில், இவள் தன் பெயரை அக்கொள்ளைத்தலைவன் மனைவிக்குத் தெரிவிக்க வேயில்லை.

-

உடனே அவள் பார்வையினது வியப்புக்குறிப்பின் காரணத்தைத் தெரிந்து கொண்டவளான மீனாம்பாள் “ஆம் அழகிய குமுதவல்லி நான் உங்களை அறிவேன்! ஓ, நான் உங்களுக்குச்சொல்ல வேண்டுவது மிகுதியாயுள்ளது! அதன் பொருட்டு என்னுயிர் வேண்டுமளவுக்கு நீண்டநேரம் தங்கி யிருக்கும்படி ஆண்டவன் அருள்புரிவாராக! ஆயினும், முதலாக இதனை எடுத்துக் கொள்ளுங்கள்!” என்று மொழிந்தாள்.

இவ்வாறு பேசிக்கொண்டே மீனாம்பாள் நோயோடும் வருத்தத்தோடும் தன்கையை உயரத்தூக்கினாள்; தன்மார்பி லிருந்து ஒரு சிறிய பொருளை எடுத்து அதனைக் குமுதவல்லி யிட ம் நீட்டினாள். சத்திரத்திலுள்ள அறையின்கண் தன் விரலினின்றும் நல்லானாற் கழற்றப்பட்ட மோதிரந்தான் அது, என்று தெரிந்துகொண்டவுடனே அவ்வழகிய நாகநாட்டரசியின் வாயிலிருந்து களிப்பும் வியப்பும் உள்ள ஓர் ஒலி தோன்றிற்று.

66

“ஆம் - அஃது உங்களுடையதுதான், அஃது உங்களுக்குத் தான் உரியது! இப்பொழுது அதனைத் திரும்பவும் உங்களிடம் சேர்ப்பித்ததனாலே, என் மனத்திலிருந்த ஒரு பெருங்கவலை நீங்கப்பெற்றேன்." என்று மீனாம்பாள் கூறினாள்.

அவ்வருங்கலத்தைப்பற்றி நினைத்துப்பார்த்ததும் குமுத வல்லி தன் கண்களையே நம்பக்கூடாதவளாய், “என்னுடைய மோதிரம்!” என்று இறும்பூதுடன் இயம்பினாள்; ஏனென்றால், தனக்கு எதிரில் இப்போது சாகும் நிலைமையில் உள்ள கருங்கண்மாதரார் வசத்தில்அஃது எங்ஙனம் வந்திருக்கக் கூடும்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/209&oldid=1581482" இலிருந்து மீள்விக்கப்பட்டது