உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமுதவல்லி நாகநாட்டரசி

181

என்னும் கலவர ஐயமானது அவள் உள்ளத்தை ஊடுருவிப் பாயந்தது.

66

அழகிய குமுதவல்லி, உங்களைத்தவிர மற்றவர்கள் எல்லாரும் தொலைவிலே விலகிப் போயிருக்கட்டும்; நான் உங்களுக்குச் சொல்ல வேண்டுவது மிகுதியுமிருத்தலால், நீங்கள், இங்கே இருங்கள்.” என்று மீனாம்பாள் விளம்பினாள்.

இந்தச் சமயத்தில், கனிமரத் தோப்பிலிருந்து காப்பிரிமாது வெளியேவந்தாள்; அவள் தான் பிடுங்கிக் கொண்டு வந்த பூண்டுகளைக் கடுக நசுக்கிப் பிசைந்து தன் தலையின் காயத்தில் வைத்துக் கட்டுவதற்கு விரைந்து முன்வந்தாள்.

அதனைப்பார்த்ததும் திகழ்கலை சிறிது வெகுண்டு, “நான் செலுத்தி யிருக்கின்ற மருந்துகளைக் கலைத்துவிடாதே! கடவுளுக்கும் திருவுள்ளமானால், அவ்வம்மை பிழைத்துக் கொள்வார்கள்." என்று மொழிந்தாள்.

அதற்குக் காப்பிரிமாது “அப்புறம் எட்டிநில் அம்மே - என் மனத்தின்படிதான் நான் நடப்பேன்!” என்று தீர்மானத்தோடுங் கூறிப் பின் மீனாம்பாள் கணைக்காலில் அந்த மருந்தை வைத்துக் கட்டப்போகிறவள், “அன்புள்ள பெருமாட்டி, இந்த ஒரு பரிகாரத்தைமாத்திரம் யான் செய்யும்படி விடைதரல் வேண்டும்; இறைவனுக்குத் திருவுள்ளமிருந்தால் இதனாலேயே பிழைத்துக் கொள்வீர்கள்!” என்று மீனாம்பாளைப் பார்த்துப் பகர்ந்தாள்.

"உனக்குத் தகுதியாகப்படுவதை நீ செய்

ஆனாற், செய்வதை விரைந்து செய் - ஐயோ, எனக்கோ நம்பிக்கை இல்லை! அப்பாம்பின் நஞ்சு என் நரம்புக்குழாய்களிற் சுற்றி ஓடுகிறது. கள்ளம் ஏதும் அறியா அழகிய குமுதவல்லியினிடத்து இழைத்த தீமைகளுக்குப் பரிகாரமாக எனக்கு இன்னும் எஞ்சியுள்ள சிறிது அரிய நேரத்தையும் நான் முற்றும் பயன்படுத்திக்கொள்ள விரும்புகிறேன்.” என்று மீனாம்பாள் மறுமொழிந்தாள்.

கடைசியான இந்தச் சொற்கள் தாழ்ந்த புலம்பற் குரலிற் சொல்லப்பட்டமையால் அவை குமுதவல்லியின் செவிகளில் மாத்திரம் பட்டன; காப்பிரிமாதோ பிசைந்தமருந்தைப் பாம்புகடித்த கணைக்காலில் வைத்து அதனைத் தன் முக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/210&oldid=1581483" இலிருந்து மீள்விக்கப்பட்டது