உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182

மறைமலையம் – 13

காட்டிலிருந்து கிழித்த துணியினாற் கட்டிக்கொண்டு அம் முயற்சியில் நினைவு அழுந்தியிருந்தாள்.

அதன்பின் அக்காப்பிரிமாது, “பெருமாட்டி, இப்போது மருந்து கட்டிமுடிந்தது. தங்களைக் காப்பாற்றுவது ஏதேனும் இருந்தால், அஃது இதுதான். நான் பிறந்தநாட்டில் மிகவுங் காடுமையான நச்சுப் பாம்புகளின் கடுவையும் முறிக்கும் மருந்தாக இப் பூடுகள் கொடுக்கப்பட்டதனை நான் கண்டிருக் கிறேன்.” எனப் புகன்றாள்.

66

போதும், என் நம்பிக்கையுள்ளபணிப்பெண்ணே, என் நெஞ்சத்தில் பிழைப்பேனென்னும் நம்பிக்கையில்லை என்றாலும், நீ நல்லெண்ணத்தோடு செய்த ஊழியத்திற்காகயான் பாராட்டும் நன்றியறிவு சிறிதும் குறைவுபட்டிலது. அங்ஙனமே திகழ்கலை உனக்கும் எனது நன்றியைச் செலுத்துகின்றேன்! ஆயினும், நீங்கள் எல்லாரும் விலகிப் போங்கள். குமுதவல்லியோடு தனித்திருக்கவேண்டும்.” என்று மீனாம்பாள் நுவன்றனள்.

று

யான்

உடனே அவ்வறிவோளும், காப்பிரி பெண்ணும் மலை நாட்டுப் பணிப்பெண்ணும், சுந்தராம்பாளும், ஞானாம்பாளும், காதிற்கு மாத்திரம் எட்டாதாயினும், அவர்கள் அழைக்குஞ் சமயத்தில் தாம் உடனே சென்று உதவத்தக்க அண்மையில் உள்ளதான ஓரிடத்திற்கு அவ்வாறே ஒதுங்கிப்போயினர். அக்கரியவிழிமாதரார் தெரிவிக்கப்போவது எதுவாயிருப்பினும் அதனைக்கேட்கும் ஆவலோடும் ஐயுறவோடும் குமுதவல்லி எதிர்பார்த்திருந்தனள்; ஏனென்றால், மீனாம்பாள் பேசிய சொற்களைக் கேட்டபிறகு, அவள் யாராயிருக்கக்கூடுமென்றும், அந்த மோதிரம் அவள் வசத்தில் எங்ஙனம் வந்திருக்கக்கூடும் என்றும் நாகநாட்டரசி முன்னையிலும் மிகுதியாக விம்மிதம் உற்றாள்.

உடனே, மீனாம்பாள், சாவின் களவான வருகையைத் தெரிவிப்பதுபோல் அவ்வளவு மெலிந்த தன்மையோடு பேசினாலும், தெளிவாகவும் காதிற்கு எட்டத்தக்கதாகவும் உள்ள குரலில், “அழகிய குமுதவல்லி, என்னிடத்தில் நீங்கள் இரக்கங் காட்டினீர்கள்- என் பொருட்டுக் கவலையும் அடைந்தீர்கள் அமைதியான உங்கள் நல்ல இனிய அழகினால் முன்னே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/211&oldid=1581484" இலிருந்து மீள்விக்கப்பட்டது