உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமுதவல்லி நாகநாட்டரசி

183

மனங்கசியப் பெற்ற யான் இப்போது என் நெஞ்சம் முழுதும் உருகப் பெற்றேன்! குமுதவல்லி, திடுக்கிடாதீர்கள்- என்னை அருவருப்போடு பாராதீர்கள் - ஓ! முன்னமே நோய்ப்பட்டிருக்கும் என்னைப் பின்னும் புண்படுத்தாதீர்கள்! நான் அக்கொள்ளைத் தலைவனுக்கு மனைவி யென்று சொல்லும்போது என்னைத் துயரத்தோடும் இரக்கத்தோடும் பாருங்கள் ஆம், நான் நல்லானுக்கு இல்லக் கிழத்தியே!” என்று விளம்பினாள்.

-

இவ்வுண்மை வெளிவரக்கேட்ட குமுதவல்லிக்கு உண்டான இறும்பூது இவ்வளவுதான் என்று விரித்துச் சொல்ல ஏலாது; ஆனாலும் புண்ணியத் தன்மைவாய்ந்த அவளது நெஞ்சமானது, திண்ணமாகவே பிழைக்கமாட்டாது இறந்து போகும் நிலை யிலுள்ள மீனாம்பாளிடத்தில் அருவருப்பாவது எரிச்சலாவது காட்ட ஒரு சிறிதும் இடந்தரவில்லை.

"ஓ! உங்கள் கணவன் எனக்குச் செய்த தீமைக்கு நீங்கள் வேண்டிய அளவுக்குப் பரிகாரம் செய்துவிட்டீர்கள்! அவர் என்னிடத்திலிருந்து எடுத்துக்கொண்ட மோதிரத்தைத் திருப்பி எனக்குக் கொடுத்துவிட்டீர்கள்! ஓ, அவர்தாம் அதனை எடுத்துக்கொண்டவர் என்பது எனக்குத் தெரியும்.” என்று குமுதவல்லி தன் கன்னங்களிற் கண்ணீர் ஒழுக மெல்லெனக் கூறினாள்.

“உங்களுக்கு அது தெரியுமா” என்று இப்போது மீனாம் பாள் தான் வியப்புற்று வினவினாள்.

66

ஆம், நான் இருந்த அறையினுள் அவர் நுழைந்ததைத் தான்கண்டேன்.நான் அயர்ந்து உறங்குவதைப் போலப் பாசாங்கு செய்தேன் எ னன்றால், அவர் தம்கையில் கட்டாரி ஒன்று வைத்திருந்தார் ஓ! நான் அஞ்சினேன் -” என்று குமுதவல்லி L மறுமொழி புகன்றாள்.

மீனாம்பாள் நடுக்கத்தோடும் “பெருமாட்டி, அதனைச் சொல்லாதீர்கள், அப்படியானால் நீங்கள் என்கணவனைப் பார்த்தீர்களோ?" என்று கூறினாள்.

அதற்கு “ஆம்-ஆம் நான் அவரைப்பார்த்தேன்.” என்று விடைகூறிப் பின்னும், “அவர் என்னைத் துன்பப்படுத்திக் கொண்டு வந்தார். அவர் ஏன் எனக்கு அவ்வளவு பொல்லாங்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/212&oldid=1581485" இலிருந்து மீள்விக்கப்பட்டது