உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184

மறைமலையம் - 13

செய்யத் தேடினார்? என்பதை எனக்குச் சொல்லுங்கள்.” என்று குமுதவல்லி கேட்டாள்.

66

அழகிய குமுதவல்லி, திரும்பவும் உங்களிடம் நான் சிறிது முன்னே கொண்டுவந்து சேர்ப்பித்த அவ் எந்திரத்தின் மதிப்பு உங்களுக்குத் தெரியாது என்பதனை யான் நன்கு அறிவேன். ஓ! என்னைவந்து மூடுகிற இத்தவிப்பு யாது? இது சாக்காடாகத் தான் இருக்கவேண்டும்!” என்று மீனாம்பாள் இயம்பினாள்.

சு

உண்மையிலே, விளக்கின் சுடரைப்போல் அத்தனை ஒளியோடு மிளிரும் இயல்பினையுடைய மீனாம்பாள் கண்கள் பளிங்குபோல் ஆகத் துவங்கின; சாவின் விகாரவடிவம் ஏற்கனவே அவள் முகத்தின்மேற் காணப்படுவதாயிற்று. அக்கொள்ளைத் தலைவன் மனைவியைக் குமுதவல்லி தன் கைகளிற் றாங்கி காண்டிருந்தாள்; “ஓ, நான் என்ன செய்யக் கூடும்? யாது உதவி நான் இயற்றக்கூடும்?” என்று அவ்வழகிய நங்கை நடுங்கிய குரலோடு கூறினாள்.

"ஒன்றுமில்லை குமுதவல்லி - ஒன்றுமில்லை!” என்று மீனாம்பாள் மனத்தை உருகச்செய்யும் துயரத்தோடு அமைதி யாகச் சொன்னாள்; அதன்பிறகு இன்னும் மிஞ்சியிருக்கின்ற தன் வல்லமையை ஒருங்குசேர்த்துக்கொண்டு - நழுவிப்போகும் தன் ஆண்மைகளில் மிச்சமா யிருப்பனவற்றை ஒருங்கு தொகுத்துக் கொண்டாலென்ன அவள் கூறுவாளானாள்: “இன்னுஞ்சிறிது நேரம் யான் உயிர் பிழைத்திருக்கும்படி கடவுள் அருள் புரிவாராக! ஓ குமுதவல்லி, எவ்வளவு அன்போடு நான் என் கணவனைக் காதலித்து வந்தேன், இன்னும் காதலிக்கின்றேன் என்பது உங்களுக்குத் தெரியாது! ஆனாலும், இந்த மேலான சமயத்தில் அழிந்து போவதொன்றும் அழியாமல் நிலைத் திருப்பதொன்றுமாகிய இரண்டுலகங்களுக்கு இடையிலே என் ஆவி தொங்கிக்கொண்டிருக்கிற சமயத்தில் - சீலத்தையும் மன அமைதியையுமே இன்னும் மேலாக நான் நேசிக்கின்றேன்!'

66

உங்கள் கணவனார் எனக்குச் செய்திருக்கும் அல்லது செய்ய நினைத்திருக்கும் தீங்குகளுக்காக எப்போதாயினும் நான் பழிவாங்குவதற்கு ஏற்ற சமயம் வாய்த்தாலும் நான் அவரைப் பழிவாங்கப்பார்ப்பேனென்று நினையாதீர்கள்!" என்று அக்கறையுள்ள குரலோடு குமுதவல்லி உறுதி மொழி புகன்றாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/213&oldid=1581486" இலிருந்து மீள்விக்கப்பட்டது