உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமுதவல்லி நாகநாட்டரசி

35

அறியும்பொருட்டு அருகாமையில் ஏதேனுங்குடிசைவீடு இருக்கின்றதாவெனத் தேடினர். அச்சமயத்தில் தனக்குச் சிறிது தூரத்தில் ஒருகரை மேல் கிழவனொருவனிருப்பதை நீலலோசனன் கண்டான். இக்கிழவன் அம்மலைநாட்டில் தாழ்ந்தகுடியிற் பிறந்தவர்க்குரிய முறைப்பான உடை கட்டியிருந்தான்; பணிசெய்யப்போம்பொழுது இளைப்பாறுதற் பொருட்டு அங்கேசிறிது நேரம் இருந்தவனாகக் காணப் பட்டான்.இவனைப் பார்த்து வழி எதுவென்றுகேட்ப, அவனுந் தானிருந்த வழியே நேராக நீலகிரி நகரத்திற்குச் செல்லுகின்ற தென்று உரைத்தான். உடனே நீலலோசனன் அவன் முகமாய் ஒரு பொற்காசு வீசினன். அந்நாட்டிலுள்ளோர் வறியரா தலால் இப்பொற்காசினைக் கண்டவுடன் மிகப் பணிந்து அன்பு தோன்ற அஃதீந்தோனை வாழ்த்துவர், மற்று இக்கிழவனோ அக்காசினை மிகவும் அலட்சியமாய் எடுத்துக் கொண்டு அக் காசு தந்த இளைஞனை நோக்கி வெறுப்புடன் சுருக்கமாகச் சிலநன்றியுரை கூறியபின், அரசிளைஞனுக்குத் தான் காட்டிய வழிக்கு எதிர்

முகமாய்ப்போயினான்.

போனவன் அப்பக்கத்துள்ள அடர்ந்த காட்டினுள்ளே புகுந்து மரத்தொகுதிகளின் நடுவே மறைத்து அமைக்கப்பட்ட தன்குடிசையினுள் நுழைத்து,. தான் எடுத்துவந்த பொற் காசினைத் தரைமேல் வீசியெறிந்து மிகவும் வெறுப்போடு

66

ஒருகணமாத்திரமாவது என் பகைவன் கையினின்றும்

இக்காசினைப் பெறும்படி நேர்ந்ததே! அவன் என்னைத் தோற்க அடித்தனனே! நான் அவனால் தாழ்வடைந்தேனே” என மிக வருந்திக் கூறினான்.

W

அப்போது அக்குடிசையிலிருந்த நடுத்தர வயதுடை வனான ஒருவன் அக்காசை எடுக்க விரைந்து போய் “என் நண்பனே உனக்கு யாது நேர்ந்தது? ஏன் இங்ஙனம் உரக்கக்கூவி வருந்துகின்றாய்?" என்று வினவினான்.

ங்

அதற்கவன் “அது கிடக்கட்டும். நீ கொடுத்த இவ் வேடத்தை நீயே எடுத்துக்கொண்டு, எனக்குரிய உடையினை என்னிடங் கொடுத்துவிடு! கூலித்தொழிலாளிக்குரிய இவ்வேடத் தினால் யான் ஒரு தொழுத்தைபோல் நடத்தப்பட்டேன். ஆயினும் அச்செருக்குடைய ய பௌத்த ளைஞன் அக்காசினை வீசியபோதே, அவனை வஞ்சித்தேன்! என் முகத்திற் குழப்பித்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/64&oldid=1581319" இலிருந்து மீள்விக்கப்பட்டது