உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

மறைமலையம் 13

தடவின இவ்வழுக்கைக் கழுவுவதற்கும், என் கரியமயிரை வெளுக்கச்செய்த இவ்வெள்ளைப்பொடியைப் போக்குவதற்கும் எனக்குத் தண்ணீர் கொண்டுவா” என்றான்.

அக்குடிசை வீட்டிற்கு உரியனான அம்மற்றையோன், தான் முன்னறியாத அப்புதியோனைத் தான் “நண்பனே" என்றழைப் பினும், இப்போது வெருக்கொண்டு நோக்கிப் பின் அவன் அலட்சியமாய் வீசிய பொற்காசைக் கையில் எடுத்துக் கொண்டு எதுவாயிருப்பினும் நீ நினைந்த கருமத்தை முடித்தற்கு மேற்கொண்ட இவ்வேடம் உனக்குப் பயன் பட்டதா?” என்று

66

கேட்டான்.

கேட்டதும் “அது கிடக்கட்டும், எனக்குத் தண்ணீர்கொடு; என் உடைகளையும் படைக்கலங்களையும் கொண்டு வந்து வை! என் குதிரையைப் பிடித்துவா! என் சொந்த மலை நாட்டிற்குப் போய்த் திரும்பவும் நான் இளைப்பாறுதற்கு மிக விரும்பு கின்றேன்” என்று அவன் மறுமொழி புகன்றான்.

அவ்வாறு அவன் விரும்பியபடியே அக்குடிசைக்காரன் யாவுஞ் செய்தானாக, அம்மற்றையோன் தன்முகம் மயிர் முதலியவற்றைக் கழுவிக்கொண்டு, தான் முன்மேலிட்ட ஏவலாளன் உடுப்புகளைக் களைந்து கொடுத்துத், தன்னுடை களை யுடுத்துக் குதிரைமேலேறி விரைந்துபோயினான். இவன் யாரோவெனின் கள்வனான இருளனேயன்றிப் பிறன் அல்லன்.

இனி இங்ஙனம் பொய் வேடக்காரனால் வழிதவறிச் சல்லுகின்ற நீலலோசனனையும் அவன் மெய்க் காப்பாளர் ருவரையும்பற்றிக் கவனிப்போம்.

66

‘அம்மனிதனிடத்தில் அவமரியாதை தவிர இன்னும் ஏதோ சில தீயகுணங்கள் இருப்பது மாட்சிமை நிறைந்த தங்கட்குத் தோன்றுகின்றதா? நான் அவன் முகத்தில் ஒரு தீக்குறிதோன்றிய தென்று நினைத்தேன். அவன் தங்கள் திருமுன்பு பேசுகையில் தங்கள் முகத்தை நோக்காமல் தன் கைக்கோலால் கீழே கிடந்த கற்களைத் தட்டிக்கொண்டு இருந்தனனே" என்று நுட்பவறி வினனும் மிக்க சாக்கிரதையு டையனுமான கேசரிவீரன் கூறினான்.

அதற்கு நீலலோசனன் தன் கரிய மீசைமயிரோடு இகலிமுத்துவரிசை போன்ற அழகிய பற்கள் துலங்க நகைத்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/65&oldid=1581320" இலிருந்து மீள்விக்கப்பட்டது