உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

குமுதவல்லி நாகநாட்டரசி

37

அரண்மனையில் நடைபெறும் மரியாதை ஒழுக்கங்களை மலைநாட்டு ஏவலன்பாற் காண்டற்கு விரும்புதல், என் அன்புள்ள கேசரிவீர, பொருந்துமா? அவன் நம்மை ஒழுங்கான வழியில் செலுத்தியிருந்தானாயின், அவனது நன்றியில் வொழுக்கத்தைப் பற்றிச் சிறிதும் நாம் கவலல் வேண்டாம்” என்றனன்.

அதற்குக் கேசரிவீரன் “நல்லது, அவன் நமக்குச் செவ் வையான வழிகாட்டியிருந்தானாயினன்றோ? அஃதின்னுஞ்சில நாழிகைக்குள் தெரிந்துவிடும். தங்கள் மாட்சிமை நிறைந்த சமூகத்திற் பெரிதும் வணக்கமுடையேனாய் நான் நினைத்துக் கூறுவது இது. போகப்போகக் குறுகிச் சந்துவழியாய்ப்போகும் இந்நெறி நீலகிரி நகரத்திற்கு நேரே செல்லும் இராச பாட்டை யாகச் சிறிதும் தோன்றவில்லை” என்று விடை பகர்ந்தான்.

பாதையும் உண்மையாகவே குறுகலாய்த்தான் இருந்தது; அது குறுகிச் செல்லச்செல்ல அவ்விடம் நிரம்பவும் பேரழகு டையதாய் விளங்கிற்று. தலைக்குமேலே ஒன்றோடு ஒன்று பின்னலாய் வளர்ந்திருக்கும் மரங்கள் தண்ணிய நிழலைப்பயந்து வழிச்செல்வோர்க்கு ஞாயிற்றின் வெம்மையை மாற்றின. கோடிக்கணக்கான நறுமலர்கள் அக்கரையைக் கவிந்திருந்தன. அவ்வியல்பை நுணுகி நோக்கும்போது, உலகமங்கை தன் மலர்ச்சுமையைத் தாங்கிப்போவதற்கு ஏலாமல் அயர்ச்சி யடைந்து அவற்றை அங்கே சொரிந்துவிட்டாற் போலத் தோன்றிற்று; முந்திரிக்கொடிகள் மிகத் தித்திப்பான பழக் குலைகளைச் சுமந்து கிடந்தன; இன்னும் பலவேறுவகைப்பட்ட இனிய பழங்களும் வழிச்செல்வோர் கைக்கு எட்டிய தூரத்தில் தொங்கிக்கொண்டிருந்தன.

"இந்த நெறிதான் நீலகிரி நகரத்திற்கு நேரே செல்வ தாயிருக்க வேண்டுமென உறுதியாக நம்புகின்றேன். இ து போகப்போக இவ்வாறே அழகிற் சிறந்து தோன்றுமென்று புலப்படுகின்றது. எல்லாவற்றிற்கும் நாம் போம்வழியில் யாரேனும் எதிரேவந்தால் அவரைக்கேட்போம், அல்லது ஏதேனுங் குடிசைவீடு அருகாமையிலிருந்தாலும் தெரிந்து கொள்வோம் அதோ ஒரு சிறிய ஓடை ஓடும் சிற்றொலி கேட்கின்றது! நான் மிகவுந்தாகங் கொண்டிருத்தலால் அவ் வோசை எனக்குப் பண் இசைத்தாற்போல இருக்கின்றது; இங்குள்ள கொடிமுந்திரிப் பழக்குலைகளை நெருக்கிப் பிழிந்

-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/66&oldid=1581321" இலிருந்து மீள்விக்கப்பட்டது